நவம்பர் 17-ம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க அனுமதி: முதல்வர் அறிவிப்பு..
கர்நாடகா மாநிலத்தில் நவ.17-ம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது..
கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் ஆன்லைன் மூலமும் வகுப்புகளில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை கட்டாயப்படுத்தி கல்லூரிகளுக்கு வரவழைக்கக்கூடாது எனவும் கர்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது..