பத்தாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், டி.சி., என்ற மாற்று சான்றிதழ் கட்டாயம் வழங்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கல்வி இயக்குனரகத்தின் 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை பிரிவில் இருந்து, அனைத்து பள்ளிகளுக்கும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்:அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, டி.சி., என்ற மாற்று சான்றிதழை தயாரித்து கட்டாயம் வழங்க வேண்டும்.
அதே பள்ளியில், மாணவர்கள் பிளஸ் 1 படிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கும் மாற்று சான்றிதழ் வழங்குவது அவசியம். எந்த காரணத்திற்காகவும், மாற்று சான்றிதழ் தராமல், மாணவர்களை பிளஸ் 1ல் சேர்க்க வேண்டாம். பிளஸ் 1 வகுப்பில் சேரும் மாணவர்கள், அதே பள்ளியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் புதிய மாணவர்களாகவே கணக்கிடப்பட்டு சேர்க்கை எண் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.