பள்ளிக் கல்வி - 2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கு 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை - ஒன்பதாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளி அளவிலான மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!
பள்ளிக் கல்வியில் 10 ஆம் வகுப்பு முடித்து மேல்நிலைக்கல்வி பயில்வதற்கும், பல்தொழில் நுட்பக்கல்லூரிகள், (Polytechnic Colleges) தொழிற்பயிற்சி நிறுவனங்கள் (Industrial Training Institutes) மற்றும் பிற மேற்படிப்பு நிறுவனங்களில் சேருவதற்கும் 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அவசியமாகிறது.
தற்போது 2021-22ம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பில் சேர உள்ள மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் 2019-2020ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டுத்தேர்வும் நடைபெறாத நிலையில் 11ஆம் வகுப்பு மற்றும் சம்பந்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கான சேர்க்கைப் பணிக்காக மட்டும் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்பட்டியல் அளிக்க கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.
காலாண்டு அல்லது அரையாண்டு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.
குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 என வழங்கலாம்.
பள்ளிக் கல்வி ஆணையரின் முழுமையான சுற்றறிக்கை.👇👇