தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்காண வகுப்புகளை ஜூன் 3வது வாரத்தில் தொடங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அதற்க்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.
தமிழகத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழக அரசு வெளியீடு ஜூன் 3வது வாரத்தில் இருந்து 11ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகளை தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
பார்வையில் கண்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்கில், தனியார் சுயநிதிப்பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பிரிவுகளில் ஏற்கெனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு, மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில் அவர்களது விருப்பத்திற்கேற்றபடி பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில் கோவிட்-19 பெரும்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்த்திடலாம். அதிகப்படியன விண்ணப்பங்கள் எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ, அச்சூழ்நிலையில் அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களிலிருந்து 50 வினாக்கள் (கொள்குறிவகை) அந்தந்த பள்ளி ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கி, அவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.
பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜுன் 3 வது வாரத்திலிருந்து அப்போது கோவிட் பெருந்தொற்று குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளைத் துவங்கலாம். 2021-2022 ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி, உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத்தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம்.
மேற்குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கையினை நடத்திட அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் வரும் 14ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு.