How to apply NEET Exam 2021 ? நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Tuesday, July 13, 2021

How to apply NEET Exam 2021 ? நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


2021 ஆம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது


எப்படி விண்ணப்பிப்பது:


4 Steps 


  • Apply for Online Registration
  • Fill Online Application Form
  • Upload Scanned Photo & Signature
  • Pay Examination Fee


Step 1 - Apply for Online Registration


முதலில் NEET Official இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் New Registration என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

NEET Official இணையதள முகவரி கடைசியாக இணைக்கப் பட்டுள்ளது. ( Direct Link )👇👇👇





New Registration கிளிக் செய்தவுடன் கட்டணம் , விண்ணப்பிப்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும் அதை முழுமையாக படித்தப்பின் Click To Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்.






Step 2 - Fill Online Application Form

விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்கள்,பெற்றோரின் தகவல்கள், முழுமையான பெற்றோரின்  முகவரி , புதியதாக நமக்கான ஒரு  Password ,நிரந்தர முகவரி, தற்காலிக முகவரி ஆகியவற்றை சரியாக நிரப்ப வேண்டும்.

கடந்த ஆண்டு ஆள்மாறாட்ட புகார் எழுந்துள்ளதால் இந்த ஆண்டு முதல் ஆதார் எண் கட்டாயமாகப்பட்டுள்ளது.







பின்னர் Submit என்ற பட்டணை கிளிக் செய்ய வேண்டும்.






Submit செய்தவுடன் கொடுக்கப்பட்ட அனைத்து தகவல்களை சரிபார்க்கும்படி புதிய Window தோன்றும் அதில் அனைத்து Box Tick செய்தவுடன் Final Submit பட்டனை அழுத்தவும்.

இப்போது புதிய Window தோன்றும் அதில் Complete Application Form என்பதை கிளிக் செய்யவும்.






இப்போது தோன்றும் Window வில் தேர்வு எழுதும் மொழி மற்றும் தேர்வு எழுதும் மையத்தை தேர்வு  செய்ய வேண்டும். இங்கு நான்கு Choice நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் . பின்னர் 12 ஆம் வகுப்பு தேர்வு , பெற்ற மதிப்பெண்,படித்த பள்ளி , பள்ளியின் அமைவிடம் போன்றவற்றை நிரப்பி இறுதியாக Submit செய்ய வேண்டும். 





Submit செய்தவுடன் கொடுக்கப்பட்ட அனைத்து தகவல்களை சரிபார்க்கும்படி புதிய Window தோன்றும் அதில் அனைத்து Box Tick செய்தவுடன் Final Submit பட்டனை அழுத்தவும்.




Step 3  -  Upload Scanned Photo & Signature

அடுத்ததாக புகைப்படம் , விரல் ரேகை , கையெழுத்து  பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை Scan செய்து Upload செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் போஸ்ட் கார்ட் அளவுள்ள படத்தையும் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.





Step 4  - Pay Examination Fee


கடைசியாக கட்டணம் செலுத்த வேண்டும்.


பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.1500 விண்ணப்ப கட்டணம் உண்டு. இதர பிற்படுத்தப்பட்டவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு ரூ.1400 விண்ணப்ப கட்டணமும், பட்டியலினத்தவர்களுக்கு ரூ.800 விண்ணப்ப கட்டணம். 


மேலும் இந்த ஆண்டில் இருந்து நாடு முழுவதிலும் உள்ள ஜிம்பர், எய்ம்ஸ் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளுக்கு தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 



NEET Official இணையதள முகவரி  ( Direct Link )

Click Here