6ஆம் வகுப்பு தமிழ் - இயல் 1 ஒப்படைப்பு விடைகள் 6th Class Tamil - Lesson 1 Assignment Answers - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, August 13, 2021

6ஆம் வகுப்பு தமிழ் - இயல் 1 ஒப்படைப்பு விடைகள் 6th Class Tamil - Lesson 1 Assignment Answers

 ஒப்படைப்பு


               வகுப்பு : 6 பாடம் : தமிழ்



                                   இயல்-1



பகுதி -அ



1. ஒரு மதிப்பெண் வினாக்கள்



1. அமுதென்று என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது



அ. அமுது+தென்று 


ஆ. அமுது+என்று 


இ. அமுது+நன்று 


ஈ. அமு+தென்று


விடை : ஆ ) அமுது + என்று


2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கி விட்டது.



அ. மேதினி 


ஆ. நிலா 


இ. வானம் 


ஈ. காற்று


விடை : அ ) மேதினி 


3. எட்டு + திசை என்பதை சேர்த்து எழுதக் கிடைப்பது



அ - எட்டி திசை 


ஆ. எட்டு திசை 


இ. எட்டுத்திசை 


ஈ. எட்டி இசை


விடை : இ ) எட்டுத்திசை



4. தொன்மை என்னும் சொல்லின் பொருள்



அ. புதுமை 


ஆ. பழமை 


இ. பெருமை 


ஈ. சீர்மை


விடை : ஆ ) பழமை 



5. உயிர் எழுத்துக்கள் மொத்தம்



அ. 5 ஆ.7 இ. 12 ஈ. 18


விடை : இ ) 12




கோடிட்ட இடங்களை நிரப்புக



6. பாரதிதாசனின் இயற்பெயர் -----


விடை : சுப்புரத்தினம்


7. தமிழ் கும்மிப் பாடல் --------- என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.


விடை : கனிச்சாறு 



8. தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப் பழமையான நுால்


விடை : தொல்காப்பியம் 



9. நீண்ட நெடுங்காலமாக அறிவியல் சிந்தனைகளோடு விளங்கியவர்கள் ---------


விடை : தமிழர்கள்



10. எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு ----------- எனப்படும்.

விடை : மாத்திரை 




                               பகுதி - ஆ


II. குறுவினா


1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?


* அமுது * நிலவு * மணம் * பால் 


*வானம் * தோள் * வாள்


2. தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?


          தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்.


3. பூவின் ஏழு நிலைகள் யாவை?


    * அரும்பு 


     * மொட்டு 


         * முகை 


             * மலர் 


                 * அலர்


                     * வீ 


                          * செம்மல்


4. தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் இரண்டு எழுதுக?


   * மேனாள் குடியரசுத்தலைவர் மேதகு அப்துல்கலாம் அவர்கள்.

* இஸ்ரோ அறிவியல் விஞ்ஞானி உயர்திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.

 * இஸ்ரோவின் தற்போதைய தலைவர் உயர்திரு.சிவன் அவர்கள்.


5. ஐந்து வகை இலக்கணம் எவை?


      * எழுத்திலக்கணம் 


       * சொல் இலக்கணம் 


         * பொருள் இலக்கணம் 


           * யாப்பு இலக்கணம்


             * அணி இலக்கணம் 




                                பகுதி - இ


III. பெருவினா


1. நீங்கள் அறிந்த தமிழ் காப்பியங்களின் பெயர்களை எழுதுக?


* சிலப்பதிகாரம் 


* மணிமேகலை 


* சீவகசிந்தாமணி 


* வளையாபதி 


* குண்டலகேசி 




IV. செயல்பாடு


மேற்கண்ட படத்தை உற்று நோக்கி , கீழ்க்காணும் படத்திலுள்ள பூக்களின் பல்வேறு நிலைகளுக்கான பெயர்களை எழுதுக.


* மொட்டு


 * முகை 


* மலர் 


* அலர்



If you want to download pdf Click Below




Dear WhatsApp Admins Add  9342934162 to receive Education Murasu Kalvi news regularly