அரசு ஊழியர்களுக்கு January-1 முதல் அகவிலைப்படி உயர்வு முதலமைச்சர் அறிவிப்பு - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Tuesday, September 7, 2021

அரசு ஊழியர்களுக்கு January-1 முதல் அகவிலைப்படி உயர்வு முதலமைச்சர் அறிவிப்பு

 அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.


சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.

அதன்படி, அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும். அகவிலைப்படி அமல்படுத்தப்படுவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள் என்று அறிவித்துள்ளார்.


நிதிநிலை அறிக்கையில் ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரியிலேயே அகவிலைப்படி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித்தகுதிக்கான ஊக்கத் தொகை விரைவில் அறிவிக்கப்படும்.


ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணியமர்த்தப்படும் முறை ஒழிக்கப்படும். சத்துணவு சமையல் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுகிறது என அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக அரசு ஊழியர்கள், ஆசிரியருக்கான அகவிலைப்படி உயர்வு கடந்த 2020 ஏப்ரலில் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


பணியாளர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை விரைவில் அறிவிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்




பணியின் போது காலமான அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 



முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பு


ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.



1/1/2022 முதல் அகவிலைப்படி அமல்படுத்தப்படும் முன்னதாக  ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி முதல் வழங்கப்படும் என அறிவிப்பு


அரசு பணியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணிக்கான காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்


2017,18,19 ஆம் ஆண்டுகளில் வேலைநிறுத்தம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும்


ஒழுங்கு நடவடிக்கை காரனமாக பதவி உயர்வு பாதிக்கப்பட்டு இருந்தால் அது சரி செய்யப்படும்


அரசு ஊழியர்களுக்கு உதவி பெறும் வகையில் ஒருங்கிணைந்த தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும்



புதிதாக அரசுப் பணியில் சேரும் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சி அந்தந்த மாவட்ட வாரியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்


அரசு ஊழியர்களின் நலனில் எப்பொழுதும் அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றப்படும்


சத்துணவு சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது வரம்பு 58 இருந்து 60 ஆக உயர்த்தப்படும்


அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால் மாணவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும்


வேலை நிறுத்த போராட்டத்தின் போது பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அதே இடத்தில் பணியாற்ற கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும்


அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்க நடவடிக்கை மற்றும் அதனால் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்


முதலமைச்சரின் 110 விதியின் 14 புதிய அறிவிப்புகள் வாசிக்கப்பட்டது