மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில் பாடப்பகுதிகளை காணொலிகளாக மாற்றி, தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு இணைப்பு பாடப்பொருள் தயாரித்தல், புத்தாக்க கையேடுகள் தயாரித்தல் போன்ற செயல்பாடுகளையும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு, மாணவர்களின் கற்றல் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வினாடி வினா தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வினாடி வினா தொகுப்பினை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி அந்தந்தப் பாட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு whatsapp மூலமாக அனுப்பி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
8th Standard Quiz Social Science T/M - வினாடி வினா