நர்சரி பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் தெளிவான அறிக்கை வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1-ஆம் தேதி முதல் மழலையர் நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளித்து நேற்று தமிழக உத்தரவு வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது இது குறித்து கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், நர்சரி பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் ஆலோசனையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது பற்றி தான் விவாதித்தோம் எனவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தெளிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.