PGTRB 29.01.2022 முதல் 06.02.2022 வரை நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
பத்திரிகைச் செய்தி
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை 1 2020-21 காலிப்பணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண்.01/2021. நாள் 09.09.2021 மற்றும் திருத்திய அறிவிக்கைகள் எண். 01 A / 2021, நாள் 17.09.2021 மற்றும் 01B /2021. நாள் 21.10.2021 ஆகிய தினங்களில் வெளியிடப்பட்டன. இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 18.09.2021 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும், விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 14.11.2021 மாலை 05.00 மணி வரை கால அவகாசம் வழங்ப்பட்டது. அதில் கணினி வழி தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. தற்பொழுது, 29.01.2022 முதல் 06.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இந்தேதிகள் பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார் நிலை (Availability of Examination Centre) மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்படுகின்றது. விரிவான அட்டவணை 15 தினங்களுக்கு முன்பு வெளியிடப்படும்.
நாள்: 31.12.2021.
ஆசிரியர் தேர்வு வாரியம்
More Details Please check Below Link
👇👇👇