இல்லம் தேடி கல்வி நடைபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாலை வேளையில் சுழற்சி முறையில் தினமும் பங்கு பெற வேண்டும் - திருச்சி முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் உத்தரவு. - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Monday, December 6, 2021

இல்லம் தேடி கல்வி நடைபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாலை வேளையில் சுழற்சி முறையில் தினமும் பங்கு பெற வேண்டும் - திருச்சி முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் உத்தரவு.

 



திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


ந.க.எண்.160/ ஒபக/ இதேக /2021 நாள்.02.12.2021


பொருள்: 

            ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடி கல்வி மையம் செயல்படுதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் -சார்பு.


பார்வை: 

                ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கடித ந.க.எண்.449/சி7/SS/2020-2021 நாள்.30.11.2021.



பார்வையில் கண்டுள்ள கடித த்தின்படி 01.12.2021 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 797 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இல்லம் தேடிக் கல்வி மையங்கள் செயல்படுவதற்கு கீழ்க்காணும் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவேண்டும்.


1 இல்லம் தேடிக் கல்வி மையத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் வழங்கப்பட்ட 4 அடி x 25 அடி அளவுள்ள தகவல் பலகை மையத்திற்கான அனைத்து விவரங்களையும் கொண்டு பொதுமக்களின் பார்வைக்கு இருக்கும்படி வைக்கப்பட வேண்டும். தகவல் பலகையில் மைய எண் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.


2. இல்லம் தேடிக் கல்வி மையத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவசதி, கழிப்பிட வசதி, மின்சார விளக்கு வசதி இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.


3. மாவட்டத் திட்ட அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டுள்ள எழுதுபொருள்களை மாணவர்கள் பயன்படுத்துதலை உறுதி செய்தல் வேண்டும்.


4. ஒன்றிற்கும் மேற்பட்ட இல்லம் தேடிக் கல்வி மையங்கள் பள்ளியில் நடைபெறும் போது வெவ்வேறு அறைகளில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். 5. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கல்வி செயல்பாடுகள்


முடிந்ததும் பெற்றோர்கள் அழைத்துச்செல்வதை உறுதி செய்ய வேண்டும். இல்லம் தேடிக் கல்வி மையம் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையில் மையம் செயல்படும் வரை மையத்தில் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். 6.


7. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிக் கட்டகம், TLM அட்டை, TLM போஸ்டர் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் பயன்படுத்துதலை உறுதி செய்தல் வேண்டும்.


8. உற்றுநோக்கல் படிவம், மையத்திலுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல், தன்னார்வலர்களின் உறுதி மொழி மற்றும் குழந்தைகளின் உறுதி மொழி மையத்தில் வைத்திருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.


CEO Proceedings Download


👇👇👇


Click here