தமிழ்நாட்டில் வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 18ஆம் தேதி தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறை என்பதால் 17ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 29ஆம் தேதி பணி நாளாக அறிவித்தது தமிழக அரசு.
பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட 17-01-2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.