10th &12th STD வினாத்தாள் கசிந்ததால் பரபரப்பு
நாளை நடைபெறும் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் அச்சடிக்கப்பட்டு முன்கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், வினாத்தாள்கள் கசிந்துள்ளன.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 9ஆம் தேதியிலிருந்து திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
10,12 ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன் கூட்டியே சமூக வலைதளங்களில் லீக் ஆனதாக புகார் எழுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருப்புதல் தேர்விற்கான கேள்வித்தாள்கள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானதாக புகார் கூறப்பட்டுள்ளது. வினாத்தாள் லீக் ஆனதால் ஒட்டு மொத்த மாணவர்களும் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் கூறி உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு லீக் ஆனதாக கூறப்படுகிறது. நாளை (14 ம் தேதி) 12-ம் வகுப்பு கணித பாடத்திற்கான தேர்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் மேற்கண்ட பாடத்திற்கான வினாத்தாள் மற்றும் 10 ம் வகுப்பிற்கான அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள் உள்ளிட்டவை லீக் ஆனதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில் வினாத்தாள் லீக் அவுட் ஆனது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
புதிய தலைமுறை video செய்தி
👇👇👇👇