2022ம் ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், பிப்ரவரி மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுக்கான தேதி வெளியிடப்படும் என்றார். இந்நிலையில் சென்னை பிராட்வே தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தேர்வுக்கான தேதியை வெளியிட்டார்.
அதன்படி பிப்ரவரி 23ம் தேதி முதல் மார்ச் 23 வரை குரூப் 2, குரூப் 2ஏ தேர்விற்கு http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களான தேர்வு மே 21ம் தேதி தேர்வு நடைபெறும். 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 90 மதிப்பெண்களுக்கு கீழே பெற்றால் தேர்ச்சி இல்லை என்றும் குறிப்பிட்ட பாலச்சந்திரன், "200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ் மொழி தகுதி தேர்வாக இருக்கும்" என்றும் கூறினார். மொத்தம் 5,417 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். டிசம்பர் ஜனவரியில் கலைந்தாய்வு நடைப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், Aptitute-ல் 25 கேள்விகள் என்று 200 கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்கிலத்தில் எழுத விரும்புவர்களுக்கு ஆங்கிலத்தில் 200 கேள்விகள் கேட்கப்படும் எனவும், 200 கேள்விகளுக்கான மொத்த மதிப்பெண்கள் 300 என தெரிவிக்கப்பட்டுள்ளது.