ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 6. பத்திரிகைச் செய்தி - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, March 25, 2022

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 6. பத்திரிகைச் செய்தி


ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 6.


பத்திரிகைச் செய்தி


2020 - 2021 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1/கணினி பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) No. 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) கடந்த 12,02,2022 முதல் 20.02.2022 வரை இருவேளைகளில் நடைபெற்றது.


ஆசிரியர் தேர்வு வாரிய Master Question Paper உடன் வெளியிடப்படும். தற்காலிக விடைக்குறிப்பின் மீதான ஆட்சேபனைகளை இணையவழியில் தேர்வர்கள் தெரிவிக்கும் முறை (Objection Tracker) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறையில் முற்றிலும் கணினிபடுத்துவதில் தொழில்நுட்ப குறைபாடு உள்ளதை சீர்செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்குரிய பணிகள் நடவடிக்கையில் உள்ளது.


இப்பணி முடிவு பெற்று Objection Tracker தயாரானவுடன், தேர்வர்கள் அளித்த விடைகளுடன் கூடிய வினாத்தாள் (View Your Of witht candidate response) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தற்காலிக விடைக்குறிப்புடன் Master Q.P. (Tentative Key answers with Mastor Q.Pof TRB) தற்காலிக விடைக்குறிப்பின் மீதான ஆட்சேபனைகளை தெரிவித்திடும் Objection Tracker ஆகியவை ஒரே நேரத்தில் கூடிய விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்படுகின்றது. 


நாள்: 25.03.2022.

தலைவர் 






If you Want to Download TRB Official Press Release

👇👇👇


Click Here Download