10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகள் தீவிரம் - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Wednesday, April 20, 2022

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகள் தீவிரம்

 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகள் தீவிரம்



தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்க உள்ள நிலையில் மாவட்ட வாரியாக தேர்வில் மாணவர்கள் பயன்படுத்தும் விடைத்தாள்களுடன் ‘டாப் ஷீட்’ இணைத்து தைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் கடந்த வருடங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் கடந்த வருடம் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. நடப்பாண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியானது அதன்படி 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து 12ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் தேர்வு தொடங்கவுள்ளது.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் ஜூன் 17ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வுகள் நெருங்கும் நிலையில் மாவட்ட வாரியாக தேர்வில் மாணவர்கள் பயன்படுத்தும் விடைத்தாள்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விடைத்தாள்களுடன், ‘டாப் ஷீட்’ இணைத்து தைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.


மேலும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணையை தொடர்ந்து தற்போது 6 முதல் 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை மற்றும் வினாத்தாள் வடிவமைப்பும் வெளியிடப்பட்டுள்ளது. 


மேலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மே 13 ஆம் தேதியோடு வகுப்புகள் முடிவடையும். 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் முதல் வாரத்தில் ஆண்டுத்தேர்வு தொடங்கும் என்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் 12 ஆம் வகுப்புக்கு 12 நாட்களும் கோடை விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.