1 - 5 ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதிதேர்வு கிடையாது என்றும் 6-9 ம் வகுப்புகளுக்கு மே 5-13 வரையில் தேர்வுகள் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பாலிமர் வீடியோ செய்தியை கான 👇👇👇
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருப்பதாவது:
ஒன்று முதல் 5 -ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு கிடையாது. அதே போல் 6-9-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வரும் மே மாதம் 5 ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 30 ம் தேதி வெளியிடப்படும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மே மாதம் 2-4 ம் தேதி வரை நடைபெறும்.
2022-23 ம் ஆண்டு கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 24 ம் தேதி துவங்குகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 13 ம் தேதி துவங்கும் என தெரிவித்துள்ளது.