தமிழ்நாடுபள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கை: அமைச்சர் அறிவித்த முக்கிய தகவல்கள் - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Monday, April 11, 2022

தமிழ்நாடுபள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கை: அமைச்சர் அறிவித்த முக்கிய தகவல்கள்

தமிழ்நாடுபள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கை: அமைச்சர் அறிவித்த முக்கிய தகவல்கள்.





இன்று சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்த போது பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

* பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து சேவைகளும் கணினி மயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது!

* போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் கையேடு தயாரித்து வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மாணவர்கள் தங்கள் புகார் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க வசதியாக பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும் என்றும், அனைத்து பள்ளிகளிலும் பள்ளிச் சிறார்கள் பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரமாக ஆண்டுதோறும் நவம்பர் 15 – 22ம் நாள் வரை கடைபிடிக்கப்படும்.

* மாணவர்களுக்கு பள்ளிகளில் பாதுகாப்பாக கல்வி கற்கும் சூழலை வழங்குவதற்கு பள்ளிக்கல்வித் துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கவும் மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு.

* ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பார்வையிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முழுமையடைந்துள்ளது

100% மாணவர்கள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சேர்ந்து படித்து வருகின்றனர்

9, 10-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 94.20%

11, 12-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 88.60% - 

பள்ளிக்கல்வித்துறையின் சேவைகளை கணினி மயமாக்க நடவடிக்கை

அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் Smart Classes ஏற்படுத்தப்படும் - 

பள்ளி நூலகங்களில் உள்ள புத்தகங்கள் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள தனி Mobile App உருவாக்கப்படும் 

இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு - 2022-2023 - Download Pdf 

👇👇👇

Click Here