ஆசிரியர் தகுதி தேர்வு - நீதிமன்றம் அதிரடி - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Thursday, April 7, 2022

ஆசிரியர் தகுதி தேர்வு - நீதிமன்றம் அதிரடி

 ஆசிரியர் தகுதி தேர்வு - நீதிமன்றம் அதிரடி.




Video News 👇👇👇





ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதோர் ஆசிரியர் பணியை தொடர தகுதியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நிதிமன்றம், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் ஊதிய உயர்வு பெற தகுதியில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதோர் ஆசிரியர் பணியை தொடர தகுதியில்லை என்று உத்தரவிட்டனர்.

மேலும், கல்வி உரிமை சட்ட விதிகள் அமல்படுத்தாமல் ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதை கண்டிப்புடன் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

அறிவு, திறமை கொண்ட ஆசிரியர்களால் மட்டுமே, திறமையாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்க முடியும் என்றும், தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய அவசியம் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.