10th Public Exam May - 2022 Tamil Original Question Paper Answer Key - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, May 6, 2022

10th Public Exam May - 2022 Tamil Original Question Paper Answer Key


            


பத்தாம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வு MAY - 2022


உத்தேச விடைக்குறிப்பு

 


பகுதி -1(மதிப்பெண்கள் - 15)

i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii) கொடுக்கப்பட்ட நான்கு விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

 

1 ஆ) மணிவகை

2 ஆ) கொளல் வினா

3 அ) காடு

4 ஈ) சிலப்பதிகாரம்

5 ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காததல்

6.இ.தொடர்மொழி

7.ஈ.காற்றின் பாடல்

8 அ) புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லால் பொறிக்கப்படுபவை

9 ஆ) வேற்றுமை உருபு

10 ஈ) சிலப்பதிகாரம்

11 (ஈ) கால் உடை - காலால் உடைத்தல்

12 இ)எம் + தமிழ் +நா

13 அ) பண்புத்தொகை

14 ஆ) தமிழ் மொழியை

15 இ) வேற்றுமொழியினர் 

 

பகுதி-II (மதிப்பெண் 18)

பிரிவு - 1

 

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும் 21வது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

 

16 வசனகவிதை:


உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு

அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை

எனப்படுகிறது.

  

 

17 அ) ம.பொ.சி எதன்மூலம் இலக்கிய அறிவு பெற்றார்?

ஆ) 1906 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவத்தைத் தொடங்கியவர் யார்?

 (ஏற்றமுறையில் வினா அமைத்திருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)

 

18 அவையம்:

I அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன.

அறம் கூறும் அவையம் பற்றி அறம் அறக்கண்ட நெறிமாள் தமிழ் அவையம்என்று புறநானூறு கூறுகிறது. உறையூரிலிருந்த அற அவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.மதுரையிலிருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.அங்குள்ள அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது.

 

19 பாடலில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்கள்


சீவகசிந்தாமணி.

வளையாபதி.

குண்டலகேசி

 

20 தாவரங்களின் இளம்பயிர் வகைகளைக் குறிக்கும் சொற்கள்:

நாற்று

கன்று

குருத்து.

பிள்ளை

குட்டி

மடலி (அ) வடலி பைங்கூழ்

 

(எவையேனும் நான்கு மட்டும் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்)

 

 

 

 

21

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை


இன்மை புகுத்தி விடும். 

 

பிரிவு -2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்

 

22 அ) இன்சொல் -பண்புத்தொகை - இனிமையான சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு.

ஆ) எழுகதிர் – வினைத்தொகை கார்காலத்தில் கிழக்கில் தோன்றும் எழுகதிர் கண்ணையும் கருத்தையும் மயங்கச் செய்யும்.

(ஏற்ற வாக்கியம் அமைத்திருப்பின் மதிப்பெண் வழங்கலாம்) 

 

 

23 பகுபத உறுப்பிலக்கணம்:

 

வாழ்க வாழ்+க - வாழ் – பகுதி , வியங்கோள்வினைமுற்று விகுதி

 

24 அ) விடு - வீடு

நாம் விடுகின்ற ஒவ்வொரு பட்டமும் வீடுகள் மீது விழுகிறது.

 

ஆ) கொடு - கோடு

மாணவர்களே! கொடுக்கப்படுகின்ற விடைகளுள் முக்கியமான வாக்கியத்தை கோடு போட்டுக் காட்டுங்கள்

(ஏற்ற வாக்கியம் அமைத்திருப்பின் மதிப்பெண் வழங்கலாம்)

 


25 வெண்பா – செப்பலோசை

ஆசிரியப்பா - அகவலோசை

 

26 அ) நம்பிக்கை

ஆ) மெய்யியலாளர் 

 

27  

வருகின்ற கோடைவிடுமுறையின் போது ஆரல்வாய்மொழிக்குச் செல்வேன்' என எதிர்காலத்தில் கூறாமல், உறுதிபற்றிச் செல்கிறேன் என நிகழ்காலத்தில் கூறியமையால், இது கால வழுவமைதியாகும்.

 

28

"தேனிலே றிய செந்தமிழின் சுவை

தேறும் சிலப்பதி காரமதை

னிலே எம்முயிர்உள்ளளவும்-நிதம்

ஓதி யுணர்ந்தின் புறுவோமே

 

 

பகுதி-III  (மதிப்பெண் 18)

பிரிவு - 1

எவையேனும் இரண்டனுக்கு விடையளிக்கவும்

 

29

இளம் பயிர வகைகள்


கண்ணன் வயலில் நெல்நாற்றிற்குத் தண்ணீர் பாய்ச்சினான்.தாத்தா நிறைய தென்னம்பிள்ளைகளை வாங்கி வந்தார். கத்தரி நாற்றில் வெட்டுக்கிளிகள் இருந்தன.

மாங்கன்று மழைக்குப்பிறகு தளிர் விட்டுள்ளது,

வாழைமரத்தினடியில் வாழைக்கன்றுகள் உள்ளன. 

வடலி - காட்டில் பனைவடலியைப் பார்த்தேன்.

பைங்கூழ் சோளப் பைங்கூழ் பசுமையாக உள்ளது.

(எவையேனும் மூன்று மட்டும் எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)

 

30

அ) அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன.

ஆ) அவையம் பற்றி 'அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்' என்கிறது. புறநானூறு.

இ) மதுரையில் இருந்த அவையம் துலாக்கோல் போல் நடுநிலை மிக்கது என்கிறது மதுரைக்காஞ்சி.

 

31

 வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி :

வறுமையின் காரணமாக ம.பொ.சி. தொடக்கக் கல்வியைக்கூட தொடர இயலவில்லை. ஆனால் அவருடைய அன்னையார் இளமையில் பயிற்றுவித்த பாக்கள் மூலம் இலக்கியம் பயிற்சி பெற்றார்.

அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகிய அம்மானைப் பாடல்களை அவருடைய அன்னையார் பாடும்போது இவரையும் படிக்க வைப்பார். அதனால் சந்தநயம், எதுகை மோனை நயங்களை அறிந்தார். பிள்ளைப் பருவத்திலேயே' இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். சித்தர் பாடல்களை மனனம் செய்தார்.


சொற்பொழிவுகளைக் கேட்டு இலக்கிய அறிவு பெற்றார். சிறந்த கருத்துகளை ஏடுகளில் குறித்து வைத்துக் கொள்வார். இவ்வாறு ம.பொ.சி. ஏட்டுக்கல்வி பெறவில்லையென்றாலும் கேள்வி ஞானத்தைப் பெருக்கிக் கொண்டார். இவர் கேள்வி ஞானத்தைப் பெற்றதற்கான பெருமைக்குரியவர் திருப்பாதிரிப்புலியூர்) ஞானியாரடிகள் ஆவார்.

 

 

பிரிவு - 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்

 

32 கம்பராமாயணம் :

இந்நூலுக்கு இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி கம்பர் 'இராமாவதாரம்' எனப் பெயரிட்டார் இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது.

ஆறு காண்டங்களை உடையது.

கம்பராமாயணப்பாடல்கள் சாந்தநயம் மிக்கது.

அவற்றுள் அழகுணர்ச்சி சில கவிதைகள் பாடப்பகுதியாக அமைந்தள்ளன. தயார்

 

 

33 தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்கள் :

 


இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றியது என்று வரையறுத்துக் கூற இயலாத மிகத் தொன்மை வாய்ந்தது. தமிழ் முன்பு தமிழ்நாடு. இன்றைய கன்னியாகுமரிமுனைக்கும் தெற்கே வெகுதூரம்வரை நிலப்பரப்பாய் இருந்தது.

குமரிக்கண்டம் எனப்படும் அப்பகுதியில் இருந்த இரு தமிழ்ச்சங்கங்களால் தமிழ் வளர்ச்சி பெற்றது. அப்போது உலகமொழிகளுக்கெல்லாம் பேரரசியாய் விளங்கியது. தமிழ், மூவேந்தர்களுள் பாண்டிய மன்னர்களால் அமைக்கப்பட்ட சங்கத்தாலும், ஆதரிக்கப்பட்ட தமிழ்ப்புலவர்களாலும் செழிப்புற்று ஓங்கியது. தமிழ். அதனால், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற அரிய சங்க நூல்கள் தோன்றின. சங்கம் மருவிய காலத்தில் ஐம்பெருங்காப்பியங்களும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் முகிழ்த்தன. 

 

 

34

அன்னை மொழியே

 

அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

 

(அல்லது) தேம்பாவணி

 

நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

ஒலித்து அழுவ போன்றே!


வீரமாமுனிவர்.

 

(வினாவில் அல்லது' என்ற சொல் விடுபட்டுள்ளது. ஏதேனும் ஒரு பாடல் எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.)

 

 

பிரிவு - 3

எவையேனும் வினாக்களுக்கு மட்டும் விடையளி

 

35.

 

தொடர்

வகை

விரிவு

பூங்கொடி

உவமைத்தொகை

பூப்போன்ற கொடி

பூப்பறித்த

இரண்டாம் வேற்றுமைத்தொகை

பூவைப் பறித்த

பூப்பறித்த பூங்கொடி

அன்மொழித்தொகை

பூவைப்பறித்தபெ ண்பூங்கொடி

Asiriyarseithitvm.blogspot.comதண்ணீர்த் தொட்டி

இரண்டாம்.வேற்றுமை உருபும்பயனும் |உடன்தொக்கதொ

தண்ணீரை உடைய தொட்டி குடிநீர்

குடிநீர்

வினைத்தொகை

குடித்த குடிக்கின்ற குடிக்கும் நீர்

சுவர்க்கடி காரம்

ஏழாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்கதொகை

சுவரின் கண் உள்ள கடிகாரம்

ஆடுமாடுகள்

உம்மைத்தொகை

ஆடுகளும். மாடுகளும்

மல்லிகைப் பூ

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

மல்லிகை சிறப்பு  பூ-பொதுப்பெயர் 

 

 

 

 

 

 

36 தீவக அணி விளக்கம் :


 


செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.

 

வகைகள்:

முதல்நிலைத் தீவகம்

இடைநிலைத் தீவகம்

கடைநிலைத் தீவகம் 

 

 

 

37 அலகிட்டு வாய்பாடு:

சீர்

அசை

வாய்பாடு

கரு/வியும்

நிரை நிரை

கருவிளம்

கா/லமும்

நேர் நிரை

கூவிளம்

செய்/கை/யும்

நேர் நேர் நேர்

தேமாங்காய்

செய்/யும்

நேர் நேர்

தேமா

அரு/வினை/யும்

நிரை நிரை நேர்

கருவிளங்காய்

மாண்/ட

நேர் நேர்

தேமா

தமைச்/சு

நிரை நேர் (நிரைபு)

பிறப்பு

 

இக்குறட்பா பிறப்பு என்னும் வாய்பாடு கொண்டு முடிந்துள்ளது.

 

 

பகுதி - 1V (மதிப்பெண்கள்-b) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்:

 


 


38

 

அ)

கருணையளின் தாய் மறைவுக்கு வீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலி

முன்னுரை :

கருணையன் தன் தாயார் எலிபெத் அம்மையாருடன் கானகத்தில் வாழ்ந்து வந்த சூழலில் அவருடைய தாய் இறந்துவிட்டபோது கருணையன் அடையும் பத்தில் இயற்கையும் பங்குகொண்டு கலங்கி ஆறுதல் அளிக்கிறது.  

 

எலிசபெத் அம்மையார் அடக்கம், கருணையன் கண்ணீர்

                    கருணையன், தன் மலர் போன்ற கைகளைக் குவித்து பூமித்தாயே! என் அன்னையின் உடலை நீ அன்போடு காப்பாயாக" என்று கூறி, குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். இவ்வுலகில் செம்மையான அருங்களையெல்லாம் தன்னுள் பொதித்து வைத்து. பயனுள்ள வாழ்களை நடத்திய தன் அன்னையின் உடலை. மண் இட்டு மூடி அடக்கம் செய்து, அதன்மேல் மலர்களையும் தன் கண்ணீரையும் ஒருசேர பொழிந்தான்.

 

தாயை இழந்து வாடுதல் :


           என் தாய் தன் வாயாலே மணிபோலக் கூறும் உண்மையான சொற்களையே மழைநீராக உட்கொண்டு, அத்தாயின் மார்பில் ஒரு மணிமாலையென அசைந்து, அழகுற வாழ்ந்தேன். ஐயோ! தூய மணிப்போன்ற தூவும் மழைத்துளி இல்லாமல் இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னே வாடிக் காய்ந்து விட்டதைப் போல, நானும் இப்போது என் தாயை இழந்து வாடுகின்றேனே".

 

வழி தெரியாமல் தவித்தல்

              என் மனம் பரந்து நின்ற மரக்கிளையிலிருந்து பறிக்கப்பட்ட மலரைப் போல் வாடுகிறது" தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான புண்னின் வலியால் வருந்துவது போன்றது என்னுடைய துயரம். துணையைப் பிரிந்த பறவையைப் போன்று நான் இக்காட்டில் அழுது இரங்கி வாடுகிறேன். சரிந்த வழுக்கு நிலத்திலே, தனியே விடப்பட்டுச் செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்" 

 

ஏதும் அறியாதவன்

         "நான் உயிர்பிழைக்கும் வழி அறியேன் நினைந்து கண்ட அறிவினுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இந்த உடலின் தன்மையை அறியேன். உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொணரும் வழிவகைகளை அறியேன். காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன். என் தாய் தன் கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிவேன். என்னைத் தவிக்க விட்டுவிட்டு, என்தாய் தான் மட்டும் தனியாகப் போய்விட்டாளே!" என்று கருணையன் அழுகிறான்.

 

பறவைகளும் வண்டுகளும் கூச்சலிட்டன

             நவமணிகள் பதித்த மணிமாலைகளைப் பிணித்ததுபோன்று நல்ல அறங்களை எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன். இவ்வாறு புலம்பிக் கூறினான். அது கேட்டுப் பல்வேறு இசைகளை இயக்கியது தேன்மலர்கள் பூத்த மரங்கள் தோறும் உள்ள மணம்வீசும் மலர்களும் மலர்ந்த குளங்கள் தோறும் உள்ள பறவைகளும் வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போன்று கூச்சலிட்டன.

 


முடிவுரை

         மலர்போன்ற கை”, மணிபோலக் கூறும் உண்மையான சொல். பயிர் வளர்ந்து நெல்மணிகளைக் காணும் முன் வாடியது போல, பறிக்கப்பட்ட மலரைப் போல், அம்பினால் துளைக்கப்பட்டு ஏற்பட்ட வலியைப் போல், துணையைப் பிரிந்த பறவைபோல், வாய்மையே மழைநீர் எனப் பல உவமைகளையும் உருவகங்களையும் கையாண்டு கவிதாஞ்சலியை நிகழ்த்தியுள்ளார் வீரமாமுனிவர்

 

ஆ.

காலக்கணிதம் கவிதையில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ள கருத்துகள்:

     கவிஞனாகிய நான் ஒரு காலக்கணிதமாவேன், என் மனத்தில் கருக்கொள்ளும் பொருளை உருவம் கொடுத்து வெளியிடுவதில் வல்லவன் நான். அந்த வகையில் இவ்வுலகில் நான் ஒரு புகழ்மிக்க படைப்புக் கடவுளாவேன். என்னுடைய இந்தப் படைப்பாகிய செல்வம் பொன்னை காட்டிலும் விலைமதிப்புடைய பொருள் ஆகும்.

* சரி எனப்புட்டவற்றைப் பலர்க்கும் எடுத்துரைப்பது என் வேலை, அதுபோலத் தவறு எனத் தோன்றியவற்றை எதிர்ப்பதும் எனவேலை படைத்தல், காததல், அழித்தல் ஆகிய இம்மூன்று தொழில்களும் கடவுளும் நானுமே அறிந்த தொழில்கள் ஆகும் என்பதை அறிவீர்களாக.

நான் செல்வர்கள் கையில் சிக்கிக்கொள்ளவும் மாட்டேன். உயர்ந்த பதவியாகிய வாளைக் கண்டு பயப்படவும் மாட்டேன். ஆனால், எல்லோரிடமும் பாசமும் பற்றும் மிக்கவன்நான். எனக்கு விருப்பமான எல்லாவற்றையும் நான் மேற்கொள்வேன்.

என்னிடம் பொருள் இருந்தால் மற்றவரும் உண்டு மகிழத் தருவேன். என்னிடம் பொருள் இல்லையாயின் எம்மைச் சார்ந்தவரதம் இல்லக் கதவுகளைத் தட்டிக் கேட்பேன். வண்டாகப் பறந்து மலர்களிலெல்லாம் அமர்வேன். வாயில் உறிஞ்சிய தேனை ஊரில் உள்ளவர்க்கெல்லாம் தருவேன்.

(எவையேனும் ஐந்து கருத்துக்கள் எழுதியிருப்பின் முழுமதிப்பெண் வழங்கலாம்) 

 


 


39 இடம், தேதி

அ விளிப்பு

   பொருள்

    இப்படிக்கு

    உறைமேல் முகவரி

 

ஆ அனுப்புநர்

பெறுநர்

விளித்தல்

பொருள்

செய்தி

இப்படிக்கு

இடம்,நாள்

உறைமேல் முகவரி

 

 

 

 

40

தமிழ் படத்திற்கு பொருத்தமான ஐந்து தொடர்கள் எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

 

41 பொருத்தமாக படிவம் நிரப்பியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

 


 


42

அ) இன்சொல் பேசுவதால் விளையும் நன்மைகள் + பிறர் மனம் மகிழும்

அறம் வளரும்

* புகழ் பெருகும் நல்ல நண்பர்கள் சேருவா

அன்பு நிறையும்

(பொருத்தமாக விடை எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)

 

 

விடியற்காலை

 

காலை நேரத்தில் பொன்னிறக் கதிரவன் தன ஒளிமிக்க கதிர்களால் இருளை விரட்டும். பால வண்ண மேகங்கள் அலைகளைத் தொடங்குகின்றன. வண்ண பறவைகள் தங்கள் காலைநேரத்தை மெல்லிசையோடு ஆரம்பிக்கின்றன. அழகான வண்ணத்துப்பூச்சிகள் பூக்களைச் சுற்றி நடனமாடும். பூக்களின் மணம் காற்றை நிரப்பும் காற்று மென்மையாய் எங்கும் வீசி அனைத்தையும் இனிமையாக்கும் .


 

 


பகுதி-V (மதிப்பெண்கள் 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்கவும்

 

 

43 சங்ககாலத்து அறங்கள் இன்றும் தேவையே :

 

அ அரசியல் அறம் :

'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்

அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர்"

மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக் குடையும் அறத்தின் ஆறியீடுகளாகப் போற்றப்பட்டன. அறநெறியே அரசின் முதல் வெற்றியாகும். 'அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர் என்பதும் மன்னனது செங்கோலும் வெண்கொற்றக்குடையும், அறத்தின் கூறுகளாகும். அரசன் நீரவளம் பெருக்கி, உணவுப் பெருக்கம் காண்பதும், அனைவருக்கும் அவற்றைக் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமை எனக்கூறப்பட்டது. இவையாவும் இன்றைய அரசுக்கும் பொருந்தும். கல்வியும், நீர்வளமும், உணவும், இன்றைக்கும் சவாலாகவே உள்ளது. எனவே இந்நெறி இன்றைய அரசுக்கும் பொருந்தும்.

 

வணிகம்

வணிகம் அன்றைய காலத்தில் அறநெறியே கொண்டு, பொய் சொல்லாது. வாங்குவதிலும், விற்பதிலும் ஒரு நேர்மை இருந்தது. ஆனால் இன்றைய வணிகமோ பதுக்கல், அதிக விலைக்கு விற்றல், மிகக்குறைவாக வாங்குதல், கலப்படம் என பல செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றது. பண்டைய நாள் வணிகம் போல் செயல்பாடுகள் இருக்குமானால் நம் வணிகம் உலகின் முதன்மையாக விளங்கும்.


 


போர் :

பண்டைய போர் நெறிக்கும், இன்றையப் போர் முறைக்கும் பல வேறுபாடுகள் உண்டு. எல்லைகள் விரிந்து போரின் செயல்களும் விரிந்துள்ளன. போரின் போது உலக நாடுகளிடையேயுள்ள நெறிமுறைகள் எந்த நாட்டவரும் முழுமையாகக் கடைபிடிப்பதில்லையோ, என எண்ணத் தோன்றுகிறது. இன்றைய போர் சாதி, மத, இனச் சண்டையாகவே உள்ளது. என்பது சிறிதும் இல்லை. எல்லோரும் பேசுவதை அறநெறிகளைச் செயல்படுத்த வேண்டும்.

 

வாய்மை

வாய்மையை சிறந்த வீரமாகப் பண்டைய நாளில் கருதினர் ஆனால் வாய்மை என்று இன்று சொன்னால் சிரிப்பர் மெய்யாக, உண்மையாக வாழ்பவன் ஏமாளி, பிழைக்கத் தெரியாதவன் என்பதே உண்மையாக உள்ளது. மொத்தத்தில் வாய்மை நன்மை தரும் என்பதை உணர அறநெறிகள் வலியுறுத்துவதை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

 

 

உரைக்குறிப்பு

உலக மொழிகளுக்குத் தாய் என்று பிறந்து என்று அறிய இயலாது - சொல்வளம் மிகுந்தது –5 எருள் தரும் பல சொற்கள் - பலபொருள் தரும் ஒருசோல் நாள்தோறும் வளரும் அறிவியல் - பிறநாட்டுக் கருவிகளைப் நூல்களையும் வாங்கிக்கொண்டு இருக்க இயலாது.

 

* அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்தல் - தமிழ் எச்சொல்லையும் தன ஒலி அமைப்பிற்குள் அமைக்கும் பாங்குடையது ஏக்கருத்தினையும் தன் சொற்களால் விளக்கும் பாங்கு உடையது


பிறமொழிச்சொற்க எடுத்தாளுவதற்கேற்பத் தமிழில் போதிய ஒலி 'இல்லை' எனட இது தவறு இந்தியில் '' கரம் '' கரம்: இல்லை பிரெஞ்சு மொழியினில் 'ட கரம் இல்லை - தமிழில் உளள பிற மொழிகளில் இல்லை - அம்மொழிகளில் அறிவியல் வளரவில்லையா? - பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதலாம் - தொல்காப்பியர்.

பழைய சொற்களையே புதிய சுலைச்சொற்களாய்ப் பயன்படுத்தலாம் வானொலி, பம்பு எடுத்துக்காட்டு - இவை நிலைக்குமா? தொடக்கத்தில் தயக்கம் காலப்போக்கில் நிலைத்தல் மின்வாரியம் பேருந்து நிலையம் - தொலைக்காட்சி மாநிலம் அங்காடி -

புதிய கலைச்சொற்களை மூவகையில் அமைத்தல் முன்னமே

உள்ள தமிழ்ச்சொற்களைச் சீர்செய்து அமைத்தல் தமிழ்

முறையில் பகுதி விகுதி இடைநிலைகளை வெட்டியோ ஒட்டியோ புதுச்சொல்லாக்கல்.

கட்டு + அணம் கட்டணம் விகுதியைச் சேர்த்து அமைத்தல் · Vibration - பொருள் - அதிர்வு. அதிரவு + இ - அதிர்வி என Vibrator உருவாக்கலாம். Motive - ஊக்கி, Donor – வழங்கி, Flux - இளக்கி, இவ்வாறு தமிழின் இயல்புக்கேற்பச் சொல்லாக்கங்களை உருவாக்க வேண்டும்.

 

 

44 அ)

ஒருவன் இருக்கிறான்என்ற கதையில் என்னைக் கவர்ந்த

 "மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர்வீரப்பன்.

 

முன்னுரை :

 

             எப்படிப்பட்டவருக்கும் ஒரு துணை இருக்கும் அந்தத் துணைதான் மனிதத்தின் வேருக்கு நீர், அதில் மனிதம் துளிர்க்கும் என்ற உண்மையை வெளிப்படுத்தும் அழகிரியின் 'ஒருவன், இருக்கிறான்" என்ற சிறுகதையில் வரும் வீரப்பன் என்ற மாந்தரப் பற்றி அறியலாம்.

 

தங்கவேலு :


          தங்கவேலுவின் உறவினன் குப்புசாமி தங்கவேலுவினுடையம் மனைவிக்கு அக்கா பிள்ளை. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவன் அவன் உடல்நிலை சரியில்லாததால் தங்கவேலுவின் வீட்டிற்கு வந்தான், அவர் அவனைத் தன் வீட்டிற்குள் படுக்ä வைக்காமல் நான்கு குடித்தனங்களுக்குப் பொதுவான் நடைபாதையில் படுக்கச் சொல்கிறார். அவன் வந்தது தங்கவேலுவிற்கும் பிடிக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு மனைவிக்கும் அரசாங்க மருத்துவமனையில் சேர்த்து விட்டான் த சேர்த்துவிட்டதோடு அவர்கள் கடமை முடிந்தது என் ணிக் கொண்டு அவரவர் வேலையைச் செய்தனர்.

 

கதாசிரியரும் மனைவியும் :

              குப்புசாமி வந்தது கதாசிரியருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவருடைய மனைவி இரக்கப்பட்டாள். குப்புசாமி மருத்துவமனைக்குச் செல்லும்போது போயிட்டு வர்றேன்" என்று கைக்கூப்பிக் கூறினான். இவரும் மனத்தில் நஞ்சாக வெறுத்துக் கொண்டு போய்ட்டு வாப்பா கடவுள் கிருபையால் சீக்கிரம் குணமாகட்டும், போய்ட்டு வா என்று வாழ்த்தி அனுப்பினார்.

 

 ஆறுமுகத்தின் வருகை:

              குப்புசாமியின் நண்பன் ஆறுமுகம் சென்னை வருவதையறிந்து வீரப்பன் ஆறுமுகத்திடம் கடிதம் ஒன்றையும் கடன் வாங்கிய மூன்று ரூபாயையும் கொடுத்து அனுப்பியிருந்தான். ஆறுமுகம் அவற்றைக் | கதாசிரியரிடம் கொடுத்தான். பிறகு தன் குழந்தைகளுக்கு வாங்கிய நான்கு பழங்களிலிருந்து இரண்டு பழங்களையும் தன் உபயமாக ஒரு ரூபாயையும் கொடுத்துவிட்டுச் சென்றான்.

 

உயிர் நண்பன் வீரப்பன்


            குப்புசாமியின் உயிர் நண்பன் வீரப்பன் குப்புசாமி கூலி வேலை செய்பவன். குப்புசாமி நோய் அவனுடைய பக்கத்து வீட்டுக்காரன் வீரப்பன். காரணமாக வேலையை இழுந்து அவனுடைய தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்ட போது வீரப்பன் அவளை. அழைத்து வந்து சாப்பாடு போடுவான். வீரப்பன் சிப்பந்தியாக வேலை செய்பவன். வேலையில்லாமல் கஷ்டப்பட்ட போதும் கடன் வாங்கியாவது நண்பனுக்கு உதவியவன் வீரப்பன்.

 

வீரப்பன் எழுதிய கடிதம் :

               நீ இங்கில்லாமல் என் உயிர் இங்கில்லை. நான் உன் நினைவாகவே இருக்கிறேன். உனக்காக நாள்தோறும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். எனக்கு வேலை இல்லாததால் வருமானம் இல்லை. ஆறுமுகம் பட்டணம் போவதாகச் சொன்னான். மூன்று ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்துள்ளேன், நான் வந்து பார்க்கலம் என்றால் பஸ்ஸுக்குச் செலவாகும். அந்தப் பணம் உனக்கு உதவட்டும் என்றுதான் நான் வரவில்லை. இன்னோர் இடத்தில் பணம் கேட்டிருக்கிறேன். கிடைத்தால் நான் சீக்கிரம் உன்னைப் பார்க்க வருவேன். உன்னைப் பார்த்தால்தான் நான் தின்னும் சோறு, சோறாக இருக்கும்"

 

வீரப்பனின் மனிதம்

         வீரப்பன் தன் நண்பன் இல்லாதபோது தன் உயிரே தன்னிடம் இல்லை என்கிறான். அவனைப் பார்த்தால்தான் தான் உண்ணும் உணவுகூட உணவாகும் என்று உருக்கத்துடன் கூறுகிறான். வேலையின்றித் தவித்தபோதும் நண்பனுக்கு உதவ முற்படுகிற "கடன்பட்டும் செய்வனச் செய், என்பதை உணர்ந்தவனாய்ச் செயல்படுகிறான். இவ்வாறு பலவிதமாகப் பலமுறை உதவி செய்துள்ளான். குப்புசாமியைப் பற்றி அவனுடைய உறவினர்கள் கூட வருந்தாத நிலையில் வீரப்பனின் மனிதம் உயர்ந்து நிற்கிறது.

 


 முடிவுரை

      துணையே இல்லாதவர் என்று கதாசிரியரும், தங்கவேலுவும் அவனுடைய மனைவியும் புசாமியை அலட்சியம் செய்தனர். கதாசிரியர் மனைவி குப்புசாமிக்காக மனமிரங்கினாள். ஆனால் வீரப்பன் தன் ஏழ்மையைப் பொருட்படுத்தாமல் உதவி செய்ய வேண்டும் என்று துணையாக மனிதம் துளிர்த்துக் கொண்டுதான் நிற்கின்றார். வீரப்பனின் மனதில் மனிதம் துளிர்த்துக்கொண்டே தான் இருக்கும்.

 

அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் இடையே உள்ள பொருத்தபாடு

 

முன்னுரை

    கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் இயல்பான வரவேற்பும் எளிமையான உணவு திய வேக்காட்டில் நடந்துவந்த களைப்பை மறக்கடிக்கச் செய்துவிடும். பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேசம் கிராமத்து விருந்தோம்பல். அருநிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்களின் கதைப்பகுதி.

 

சுப்பையாவின் புஞ்சையில் அருகு எடுத்துக்கொண்டிருந்தார்கள்   இடையில் காலைக் கஞ்சியைக் குடிக்க உட்கார்ந்தார்கள். அப்போது தொலைவில் அன்னமய்யாவுடன் ஒருவர் வருவதை சுப்பையா பார்த்தான். "யாரோ ஒரு சாமியாரை இழுத்துட்டு வாரான்" என்று சுப்பையா கூற அங்கிருந்த ஒருவர் வரட்டும் வரட்டும் ஒரு வயித்துக்குக் கஞ்சி ஊத்தி நாமும் குடிப்போம்" என்று கூறினார். அவ்வழியாகச் செல்லும் தேசாந்திரிகள் இவர்களிடம் தண்ணீரோ கஞ்சியோ சாப்பிட்டுவிட்டுப் போவது வழக்கம்.

 

அன்மைய்யாவுடன் வந்த வாலிபன் :


            அன்னமய்யாவுடன் வந்தவன் தாடியும் அழுக்கு ஆடையும் தள்ளாடிய நடையுடன் காணப்பட்டான். அந்தப்பக்கம் வந்த அன்னமய்யா அவ்வாலிபனை அருகில் சென்று பார்த்தார். பசியால் தெரிந்த தீட்சண்யம் கவனிக்கக் வாடிய முகம், கண்களில் தெரிந்த கூடியதாய் இருந்தது. அவன் முகத்தில் சிறு புன்னகையை மட்டும். காட்டினான். பேசுவதற்கு விரும்பாதவன் போல் இருந்தான்.

 

லாட சன்யாசிகள் :

          அந்தச் சாலைவழியாக பலவகையான தேசாந்திரிகள் வருவார்கள். அவர்களுள் முக்கியமானவர்கள் லாட சன்யாசிகள் அவர்கள் வேட்டி கட்டிக்கொள்ளும் முறை புதுவிதமாக இருக்கும். இதனைப்பார்த்து கோபல்லபுரத்துக் குழந்தைகள் அவர்களைப் போலவே வேட்டிகட்டிக்கொண்டு விளையாடுவர்.

 

அன்னமய்யாவின் விசாரிப்பு :

             அன்னமய்யாவைப் பார்த்து அவன் மென்மையாகச் சிரித்தான் அவன் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். அவன் பேசியதில் மகிழ்ச்சியடைந்த அன்னமய்யா "அருகிலிருந்து நீச்சுத் தண்ணி வாங்கி வரவா" என்று கேட்டார். அந்த வாலிபன் நாமே அங்கே போய்விடலாம் என்பது போல் பார்த்தான். அன்னமய்யாவின் உதவியை எதிரபார்க்காதவனாய் அவனே எழுந்து நடந்து சென்றான். அனைமய்யாவின் கேள்விகளுக்கு ஒரே மாதிரியான இதழ் விரியாத சிரிப்பைப் பதிலாக்கினான். வாலிபனின் பசியைப் போக்கினான். 

 

வாலிபனின் பசியைப் போக்கினான்  :


                     ஒரு வேப்பமரத்தின் அடியில் ஏகப்பட்ட மண்கலயா கஞ்சியால் நிரப்பப்பட்டிருந்தன. சிரட்டையைத் துடைத்து அதில் நீத்தபாகத்தை அவனிடம் நீட்டினான். அக்கஞ்சியை உறிஞ்சியபோது அவனுக்குக் கண்கள் சொருகின. மிடா தொண்டை வழியாக இறங்குவதன் சுகத்தை முகம் சொல்லியதி "உட்கார்ந்து குடிங்க" என்று உபசரித்தான, இரண்டாவது முறையும் வங்கிக் குடித்தான். அதை உறிஞ்சிக் குடிக்கும்போது '' என்று அவனிடமிருந்து வந்தது கஞ்சியைக் நிழலே அவனுக்குச் சொர்க்கமாய்த் நிறைவைவிட மேலான இயவிப்பின் குரல் வேப்பமரத்து வந்தவனின் குழந்தையைப் பார்க்கும் அன்னையை போல பிரியத்துடன் அவனை பார்த்துக்கொண்டிருந்தார் அன்னமய்யா.

 

அன்னமய்யா - பெயர்ப் பொருத்தம்.

            வந்தவன் தூங்கி எழுந்ததும் அவனைச் சுப்பயைாவின் புஞ்சைக்கு அழைத்து சென்றான் அன்னமய்யா. வந்தவனிடம்  எங்கிருந்து வரீங்க? எங்க போகணும்? என்று கேட்டான் ரொம்ப தொலைவிலிருந்து தம்பி உன் பெயரென்ன? என்று கேட்டான்.அன்னம்மையா என்று சொன்னதும் அந்த பெயரை மனசுக்குள் திருப்பி திருப்பி சொல்லி பார்த்துக்கொண்டான்.

எவ்வளவு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான். எனக்கு இன்று நீ இடும் அன்னம் தான் என்று மனவோட்டம் ஓடியது. தன்னுடைய சொந்தப் பெயர் பரமேஸ்வரன் என்றும் புதுப்பெயர் மணி என்றும் கூறி, இனிமேல் மணி என்றே கூப்பிடு என்றும் கேட்டுக் கொண்டான். சுப்பையாவைப்பற்றி அவனிடம் கூறினான் அன்னமய்யா.

 

சுப்பையாவுடன் உணவு உண்ணல் :

      அன்னமய்யாவுடன் வந்த புது ஆளையும் மகிழ்ச்சியுடன் அவரையும் தங்களுடன் உண்ணும்படி உபசரித்தார்கள். அனைவரும் வட்டமாக அமர்ந்துகொண்டனர். ஒரு கால் உருண்டை கம்மஞ்சோற்றை இடது கையில் வைத்தனர். அன்னமய்யாவும் சுப்பையாவும் அவ்வாறுதான் பெற்றுக்கொண்டனர். அச்சோற்றில் சிறு பள்ளம் செய்து துவையல் வைத்தனர். அதனை உண்ணுகிற வேகம் ஆர்வம் அனுபவிப்பு அவர்கள் இதெல்லாம் பார்த்தபோது இந்த உணவு எவ்வளவு ருசியாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டான், ஆனால் அவரால் அரை உருண்டைக்கு மேல் சாப்பிட முடியவில்லை.

 

முடிவுரை


அன்னமயாவும் சுப்பையாவும் ஆளுக்கு ஒரு உருண்டை சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும் அமைதியாகக் கண்களை மூடி ஊர்க்கதைகள் பேசினர். மணி கண்களை மூடி அமைதியாக கிடந்தார். யாரென்றே அறியாத மணியை அழைத்துவந்து அவருக்கு அன்னமிட்டு பெயருக்கேற்றார்போல் நடந்துகொண்டார் அன்னமய்யா..

 

45 அ)

 

தலைப்பு குறிப்புச் சட்டகம்

முன்னுரை

பொருளுரை

மேற்கோள்

உட்தலைப்புகள்

முடிவுரை

 

 

ஆ)

தலைப்பு

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

பொருளுரை

மேற்கோள்

உட்தலைப்புகள்

முடிவுரை.