12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைக்கேடு? நாமக்கலில் குவியல் குவியலாக பிட் பேப்பர்கள் பறிமுதல்
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு ஜெராக்ஸ் கடையில் அதிகளவிலான பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் குவியல் குவியல் பிட் பேப்பர்களை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, ஜெராக்ஸ் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுகுறித்து, தேர்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் சில பள்ளிகளிலும் பிட் பேப்பர்கள் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேற்கொண்டு தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இன்று நடைபெற்ற கணிதத் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.