2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் . 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.
தற்போது விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன . அறிவிக்கையின்போது முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதிகளை தமிழ்வழியில் ளதாக சில விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர் . ஆனால் , அதற்குரிய ஆவணங்களை விண்ணப்பிக்கும் போது முறையாக பதிவேற்றம் செய்யவில்லை.
எனவே , முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் . தாங்கள் தமிழ்வழியில் பயின்றதற்கான ஆவணங்களை அரசாணை ( நிலை ) எண் . 82 , மனிதவள மேலாண்மை ( எஸ் ) துறை நாள் 16.08.2021 ன் இணைப்பில் கண்ட படிவத்தில் அனைத்து ஆவணங்களையும் 1 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழில் பயின்றதற்கான சான்று , 11.12 ஆம் வகுப்பு / டிப்ளமோ படிப்பு தமிழில் பயின்றதற்கான சான்று , இளங்கலைப் பட்டத்தினை ( UG Degree ) தமிழில் பயின்றதற்கான சான்று . முதுகலைப் பட்டத்தினை ( PG Degree ) தமிழில் பயின்றதற்கான சான்று , கல்வியியல் இளங்கலைப் பட்டத்தினை ( B.Ed. Degree ) தமிழில் பயின்றதற்கான சான்று மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை ( B.PEd . Degree மற்றும் M.PEd . Degree ) கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று உரிய அலுவலரின் மேலொப்பத்துடன் பெற்று தயார் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையில் தெரிவித்துள்ளவாறு உரிய படிவத்தில் பெற்று வைத்திருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது
. விண்ணப்பத்தில் ஏற்கனவே , தமிழ்வழி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை ' ஆம் ' என பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்பு வழங்கப்படும்.
எனவே , மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் உள்ள இவ்விவரத்தினை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது . இணையதளத்தில் உரிய மாதிரிப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட 22.08.2022 முதல் 25.08.2022 பிற்பகல் 5 மணி வரை வாய்ப்பு அளிக்கப்படும்.
தமிழ்வழி சான்று TRB Official Link
👇👇👇👇