அரசு பள்ளிகளில் அட்மிஷன்: அவகாசம் நீட்டிப்பு - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Tuesday, August 16, 2022

அரசு பள்ளிகளில் அட்மிஷன்: அவகாசம் நீட்டிப்பு

 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை, அடுத்த மாதம் வரை நடத்துவதற்கு, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.




அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளிக் கல்வி துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக, தனியார் பள்ளிகளில் இருந்து ஒரு தரப்பு மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கையை, அடுத்த மாதம் வரை நடத்துவதற்கு, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. செப்டம்பரில் காலாண்டு தேர்வு துவங்குவதற்கு முன்பு வரை, மாணவர்களை சேர்த்து கொள்ளலாம் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது