தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்ந்து சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின்படி இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே தற்காலிக நியமனம் செய்யத்தக்க வகையில் விண்ணப்பங்கள் பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.
தொடக்கக் கல்வி இயக்குநரின் அடிநத்தின் அடிப்படையில் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு/ நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2022-2023 கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் குறித்து பின்வரும் அறிவுரைகளை பின்பற்றியும், கால அட்டவணைப்படி பணிகளை மேற்கொள்ளுமாறும், தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,
1 . 01.06.2022 தேதி வரையில் அரசு / நகராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். asiriyarselthitvm.blogspot.com
2 . விண்ணப்பதாரர்களிடம் இருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
3 தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்ந்து சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின்படி இடைநிலை ஆசிரியர் பதவிக்கு அரசாணை (நிலை) எண்.12 பள்ளிக் கல்வித் (தொக 1.(1)) துறை நாள் 20.01.2020-ன்படி வரையறுக்கப்பட்டு உள்ள கல்வித் கருதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்களை மட்டுமே தற்காலிக நியமனம் செய்யத்தக்க வகையில் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்..
3) மேற்சொன்னவாறான நடவடிக்கைகள் கீழ்க்காணும் காலஅட்டவணைப்படி மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
பள்ளிகல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள்-PDF
நாள் 03.08.2022
👇👇👇👇