TRB - தமிழக அரசு கல்லூரிகளில் உள்ள விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Sunday, September 11, 2022

TRB - தமிழக அரசு கல்லூரிகளில் உள்ள விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு

 



தமிழக அரசு கல்லூரிகளில் உள்ள விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


TRB காலிப்பணியிடங்கள்:


தமிழக அரசு பள்ளிகளில் 2022 – 2023ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பற்றாக்குறை நிலவுகிறது. இதனை சரி செய்ய பள்ளிகல்வித்துறை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து முதல் கட்டமாக அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள 2000க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தற்போது முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.


அதனை தொடர்ந்து தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தாண்டு TET தேர்வை கணினி வாயிலாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 155 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் சீனியர் விரிவுரையாளர் பணியிடத்தில் 24 பணியிடங்களும் ஜூனியர் விரிவுரையாளர் பணியிடத்தில் 49 பணியிடங்களும் நிரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.


இப்பணியிடத்திற்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், போன்ற பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் எம்.இடி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் ஒரே பாடத்தில் படித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு வயது வரம்பு 57 க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி தேர்வுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.