DSE பள்ளிக்கல்வித்துறை - வானவில் மன்றம் ( Vanavil Mandram ) துவக்குதல், மாவட்டம் வட்டார மற்றும் கள அளவிலான அலுவலர்களின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் SPD PROCEEDINGS - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Saturday, November 26, 2022

DSE பள்ளிக்கல்வித்துறை - வானவில் மன்றம் ( Vanavil Mandram ) துவக்குதல், மாவட்டம் வட்டார மற்றும் கள அளவிலான அலுவலர்களின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் SPD PROCEEDINGS

 DSE பள்ளிக்கல்வித்துறை

வானவில் மன்றம் துவக்குதல்,  மாவட்டம் வட்டார மற்றும் கள அளவிலான அலுவலர்களின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் SPD PROCEEDINGS  



அனுப்புநர்   

           மாநிலத் திட்ட இயக்குநர், 

           ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,  

           சென்னை 600 006.   


பெறுநர் 

             முதன்மைக் கல்வி அலுவலர்கள். 

               ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 

                 அனைத்துமாவட்டங்கள்.  தமிழ்நாடு .  .


 ந.க.எண்.1560/ அ5/STEM/SS/2022, நாள்: .11.2022 தமிழ்நாடு 


பொருள்: 

                      பள்ளிக் கல்வித் துறை - "வானவில் மன்றம்- துவக்குதல், மாவட்டம், வட்டார மற்றும் கள அளவிலான அலுவலர்களின் பணிகள் மற்றும் பொறுப்புகள்-முதற்கட்டமாக பள்ளிகளுக்கு நிதி விடுவித்தல் சார்பு.


பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக மேற் கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும். 

அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக்கள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்தெடுப்படுதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டதே STEM (Science Technology Engineering and Mathematics) திட்டம், அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் இணைந்த செயல் திட்டமாகும். இத்திட்டம் தமிழக அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும். பள்ளிக் கல்வித் துறை "வானவில் மன்றம்" துவக்குதல், மாவட்டம், வட்டார மற்றும் கள அளவிலான அலுவலர்களின் பணிகள் மற்றும் பொறுப்புகள் - முதற்கட்டமாக பள்ளிகளுக்கு நிதி விடுவித்தல் - சார்பு.   

STEM-இன் பரிணாம வளர்ச்சி

 சுமார் 12,000 ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தாமாக முன்வந்து STEM திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்பட விருப்பம் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான கலந்துரையாடலில் வகுப்பறையில் அறிவியல் மற்றும் கணிதக் கற்றலை மிகவும் எளிமையாகவும் திறமையாகவும் நிகழ்வுகளை அமைக்க ஆசிரியர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் கடினமானவை என கருதப்படும் தலைப்புகளை பட்டியலிட்டனர்,  இந்த பரிந்துரைகள் மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு, மேலும் செயல் திட்டங்களை வகுக்க பயன்படுத்தப்பட்டன. “கேள்வி கேட்பது" மற்றும்"ஆராய்வதன் மூலம்" மாணவர்கள் திறம்பட கற்கத் தொடங்கினர் என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர். ஒரு சில ஆசிரியர்கள், 'மாணவர்கள் ஒரே கோட்பாட்டிற்கான ஆய்வுகளை பல்வேறு விதமான மாற்றுப் பொருட்களைக் கொண்டு தமது ஆய்வுகள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றனர்.

மேலும் பள்ளியைத் தொடர்ந்து மாணவர்கள் தங்கள் வீடுகளில் சோதனைகளைச் செய்யத் தொடங்குகின்றனர் எனவும் தெரிவித்தனர். மாநிலம் முழுவதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களின் அனுபவப்பூர்வமான உள்ளீடுகள் மற்றும் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் கணிதவியலாளர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் இத்திட்டம் மூலம் (STEM) மாணவர்களுக்கான செயல்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.   

செயல்வழிகற்றல்:   

ஆர்வமும் செயல்திறனும் மிக்க கருத்தாளர்கள் இத்திட்டத்தினை பள்ளிகளில் செயல் முறையாக செய்து மாணவர்களுக்கு விளக்கிட பள்ளிக்கு வருவார்கள். தேவையான துறை கருவிகளையும் அவர்களே கொண்டு வருவார்கள். இக்கருத்தாளர்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் பல்வேறு சோதனைகளை செய்து காட்டி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தி "செய்து கற்கும்" அனுபவத்தை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள உதவியாக செயல்படுவார்கள். அன்றாட சூழ்நிலையில் காணப்படும் அறிவியல் தொடர்பான நிகழ்வுகள் குறித்து உரையாடல்கள் அதிக அளவில் அமையும் வகையில் இத்திட்டக் கருத்தாளர்களும் ஆசிரியர்களும் இணைந்து வகுப்பறையில் செயல்படுவார்கள். வகுப்பறையில் சோதனைகளைச் செய்வதற்கு ஆசிரியர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களும், வளங்களை முறையாக பயன்படுத்துவதற்கு உரிய நிதி உதவியும் வழங்கப்படும். 

"வானவில் மன்றம்" துவக்குதல்   

அனைத்து அரசு நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் (13210 பள்ளிகள்) 28.11.2022 பிற்பகல் 2.00 மணிக்கு "வானவில் மன்றம்" துவக்கப்பட வேண்டும்.    ● வானவில் மன்றத்தின் தொடக்கமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிரண்டு எளிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளூர் அமைச்சர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் துவக்க விழாவில் பங்கேற்கச் செய்ய வேண்டும் துவக்கத்தின் அடையாளமாக வண்ணமயமான பலூன்களை காற்றில் பறக்கவிடலாம். 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு வகுப்பறைகளுக்குள் கற்பிக்கப்படும் பாடங்களோடு தொடர்பான அறிவியல் மற்றும் கணிதப் பரிசோதனைகளைச் செய்வதற்கு குறைந்த விலையில் பொருட்களை வாங்க ஒரு பள்ளிக்கு முதற்கட்டமாக ரூ.1200/- ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. (நிதி ஒதுக்கீட்டு விவரப் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது).   

அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களின் பணிகளும் பொறுப்புகளும்   

> ஆசிரியர்கள் தானே சோதனைகள் செய்து காட்டி, மாணவர்களையும் சோதனைகளை செய்ய ஆர்வமுட்ட வேண்டும்.  

 > ஒவ்வொரு வாரமும் பாடத்துடன் தொடர்புடைய கருத்துக்களை விளக்குவதற்கு ஏற்ப பொருட்களை குறைந்த விலையில் வாங்கி பல்வேறு சோதனைகளைச் செய்து காட்ட வேண்டும்.(மாதிரி சோதனைகள் இணைக்கப்பட்டுள்ளது).

> குழந்தைகளை கேள்விகளைக் கேட்க ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் சோதனை செய்யும் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் கேட்கும் ஆர்வமுள்ள கேள்விகளுடன் பரிசோதனைகளின் ஆவணங்களை பராமரிக்க வேண்டும். 

> STEM கருத்தாளர்கள் பள்ளிக்கு வருகை புரியும் போது அவர்களுடன் இணைந்து பரிசோதனைகளை செய்து காட்டவும் மற்றும் வானவில் மன்றத்தில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கவும் ஊக்குவிக்க வேண்டும்.   

> கலந்துரையாடல்கள், விரிவுரைகள், பயிற்சி பட்டறை, பணியிடை பயிற்சிகள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் 

> அறிவியல் நிறுவனங்களுக்கு களப் பயணம் (Exposure visit) ஏற்பாடு செய்யப்படும் போது மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர்களின் பணிகளும் பொறுப்புகளும் - வழக்கமான வகுப்புகளில் எந்த மாற்றமும் இல்லாமல் தேவையான செயல்பாடுகளைத் திட்டமிடவும், ஒழுங்கமைத்து எளிதாக செயல்படவும் ஒரு குழுவிற்கு அதிகபட்சம் 60 மாணவர்களுக்குள் இருத்தல் வேண்டும்.

> குழு அடிப்படையில் செயல்பாடுகளைஅமைக்கும் பொழுது ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு OTP (ஒரு முறை கடவு எண்) பெற்று கருத்தாளர்களுக்கு வழங்க வேண்டும். 

> பெற்றோர் கூட்டம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டத்தின் போது இத்திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும்.   

> வாராந்திர “வானவில் மன்றம்" நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

> STEM கருத்தாளர்களால் மேற்கொள்ளப்படும் செயல் விளக்க கூட்டங்களில் ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் வழக்கமான வகுப்பறை செய்லபாடுகளில் அன்றாட வாழ்வில் சந்திக்கும் அறிவியல் சார் உண்மைகளை எளிதில் உணர உதவ வேண்டும்

STEMகருத்தாளர்களின் பணிகளும் பொறுப்புகளும்   

பள்ளித் தலைமையாசிரியர்களை அணுகி கருத்தாளர்கள் பள்ளியில் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய அமர்வுகளுக்கான நாள் மற்றும் நேரத்தை முன்னதாகவே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.   

> அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகளுக்கு தேவையான உபகாரணங்கள் மற்றும் சோதனைகளுக்கு தேவையான வேதிப் பொருட்களுடன் (Kit Box) பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும். பயன்பாட்டில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் மற்றும் பரிசோதனை ஆவணங்களைப் பார்ப்பதன் மூலம் அமர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

> பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே போதுமான அளவுக்கு தனிமனித உறவுகளைப் பேணுதல் வேண்டும். மாணவர்கள் தங்களின் கருத்துக்களை வகுப்பறை சூழலில் பிற மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் கலந்துரையாட ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் விரும்பி ஏற்கொள்ளக்கூடிய வகையில் தங்களுடைய விளக்கங்களையும் கருத்துக்களையும் வகுப்பறையில் எளிமையான முறையில் மென்மையுடன் கூடிய கருத்துப் பரிமாற்றம் மூலம் வழங்குதல் வேண்டும். 

> இந்த திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செயலியில் அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் கேட்கும் கேள்விகளைப் பதிய வேண்டும்   

வட்டார கல்வி அலுவலரின் பணிகள்   

வட்டார கல்வி அலுவலர் (BEO) தலைமையில் ஒன்றிய அளவில் அமைக்கப்படும் குழு. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஆசிரியர்கள், BRC மேற்பார்வையாளர்(I/C), ஆசிரியப்  பயிற்றுநர்கள், சம்பந்தப்பட்ட ஒன்றியத்தின் அனைத்து STEM கருத்தாளர் மற்றும் அறிவியல் அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட வேண்டும். 

>ஒன்றிய அளவிலான குழு கூட்டங்களைஅவ்வப்போது நடத்த வேண்டும். STEM குறித்து முன்கூட்டியே செயல்திட்டம் திட்டப்பட வேண்டும். 

> STEM கருத்தாளர்களின் பள்ளி வருகை மற்றும் பள்ளி அளவில் STEM செயல்பாடுகள் சீராக செயல்படுவதை உறுதி செய்தல் வேண்டும். மாணவர்களிடையே புதுமையான செயல்பாடுகளை அடையாளம் காணவும், அவற்றைப் பதிவு செய்யவும் வழங்கப்பட்ட செயலியில் பகிர்ந்து கொள்ளவும் STEM கருத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.   

> அனைத்து ஒன்றிய அளவிலான குழு உறுப்பினர்களையும் இணைத்து, நிகழ்ச்சிகள் ஆரோக்கியமாக தொடர்ந்து நடப்பதைத் உறுதி செய்யவும், தொடர்ந்து சிறப்பாக செயல்படவும் உதவ வேண்டும். அவ்வப்போது எழும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். மாவட்ட/மண்டல / மாநில அளவிலான கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.   

மாவட்ட அளவிலான அலுவலர்களின் பணிகளும் பொறுப்புகளும்   

> முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் DEO, ADPC / APO, DIET Principal and faculties, DC- STEM ன் பிரதிநிதி, தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் அறிவியல் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு மாவட்டஅளவில் குழு அமைக்கப்பட வேண்டும். - STEM கருத்தாளர்கள் பள்ளிக்கு செல்வதையும், பள்ளி அளவில் STEM செயல்பாடுகளை நன்கு செயல்படுத்துவதையும் முறையாக கண்காணிக்க வேண்டும். மாணவர்களிடையே புதுமைகளை அடையாளம் காணவும், அதைப் பதிவு செய்து, வழங்கப்பட்ட செயலியில் பகிர்ந்து கொள்ளவும் STEM கருத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும். மாவட்ட அளவில் சிறந்த STEM கருத்தாளர்களைக் கண்டறிந்து பாராட்ட வேண்டும். 

> மாவட்ட/ மண்டல / மாநில அளவிலான கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் 28.11.2022 அன்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் இத்திட்டத்தினை துவக்க உள்ளார், மாநில அளவில் இத்திட்டம் துவக்கப்பட்டவுடன் அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் "வானவில் மன்றம் தொடங்கி செயல்பட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறும் இம்மன்றம் “துவக்கப்பட்ட விவரத்தினை ஒரு வார காலத்திற்குள் மாநில திட்ட இயக்ககத்திற்கு தெரிவிக்குமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


( PDF File ஐ Download செய்ய கீழே சிவப்பு நிறத்திலுள்ள உள்ள Click Here to Download என்பதை கிளிக் செய்யவும். )





  மாநில திட்ட இயக்குனர்  SPD PROCEEDINGS DOWNLOAD - PDF


👇👇👇








Dear WhatsApp Admins Add  9342934162 to receive Education Murasu Kalvi news regularly 

Join Whatsapp Group - Click Here