கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பினை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் “இல்லம் தேடிக் கல்வி" மையங்கள் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. கல்வியின் அடிப்படையான எண்ணறிவும் எழுத்தறிவும் அனைத்து மாணவர்களும் பெற்றிருக்க வேண்டியது மிக அவசியம் என்பதை மனதிற்கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு உறுதுணைபுரியும் வகையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குள் சிறப்பு கவனம் தேவைப்படுபவர்கள் கண்டறியப்பட்டு இல்லம் தேடிக் கல்வி மையங்களில்
அவர்களுக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தன்னார்வலர்களுக்கு நவம்பர் மாதத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்பயிற்சியினை தொடர்ந்து தற்பொழுது டிசம்பர் மாதத்தில் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி குறுவளமைய அளவில் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சிக்கு ஒவ்வொரு குறுவள மையத்திற்கும் நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும். இவர்களுக்கு வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் 15.12.22 அன்று பயிற்சி அளிக்க வேண்டும். அதன் பின் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி 17.12.22 அன்று குறுவளமைய அளவில் பயிற்சி சிறப்பாக நடத்தப்பட வேண்டும். குறுவளமைய பயிற்சியின் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் இருவேளை தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்படவேண்டும். ஒரு பயிற்சியாளர் மற்றும் பயிற்றுநருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.130/- இதற்காக செலவு செய்ய வேண்டும். தன்னார்வலர் அனைவருக்கும் பயணப்படி அவரவர் வங்கிகணக்கிற்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். பயிற்சிக்கான தண்ணீர், TLM போன்ற இதர செலவினங்களையும் பயிற்சி தலைப்பின் கீழ் மேற்கொள்ள வேண்டும். எனவே பயிற்சிக்காக ஒரு தன்னார்வலர் விதம் ரூ.200 வரை செலவு மேற்கொள்ள வேண்டும்.
இதற்கான கட்டகம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்களுக்கு மாவட்டங்களிலேயே இக்கட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் உடனடியாக கொண்டு Tamil Nadu Transparency Act யில் கூறப்பட்டுள்ள உரிய வழிமுறைகளை பின்பற்றி தொடக்க நிலை இல்லம் தேடிக் கல்வி மையங்கள் எண்ணிக்கைக்கேற்ப அச்சு பிரதி எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
இல்லம் தேடிக் கல்வி தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு 17.12.2022 அன்று நடைபெறவுள்ள குறைதீர் கற்றல் பயிற்சிக்கான கையேடு
( PDF File ஐ Download செய்ய கீழே சிவப்பு நிறத்திலுள்ள உள்ள Click Here to Download என்பதை கிளிக் செய்யவும். )
இல்லம் தேடிக்கல்வி சிறப்புப் பணி அலுவலரின் கடிதம் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் - PDF
👇👇👇