சம வேளைக்கு சம ஊதியம் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் 4-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று பள்ளிக்கல்வி துறை செயலாளர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனாலும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்விதுறை செயலாளர் கூறியதாக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் கூறினார்.
இதுவரை 100 மேற்பட்டோர் உடல் நலிவடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். முதல் நாள் போராட்டத்தில் இருந்து தொடர்ச்சியாக அவர்களின் நிலையில் நாங்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறோம், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வேலைகேற்ப சம ஊதியம் அதன்படி இந்த இடைநிலை ஆசிரியர்கள் இருக்கக்கூடிய அந்த ஊதிய உடன்பாட்டை கலைக்க வேண்டும். ஏறத்தாழ தொடக்கத்தில் 3170 ருபாயாக இருந்த முடன்பாடு தற்போது பலமுறை அதிகரித்துள்ளது. அதனால் அடுத்தடுத்து வரும் வருங்காலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, அதனால் அந்த ஊதியத்தை சம வேலைக்கு சம ஊதியம் என்று மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
உண்ணாவிரத போராட்டங்கள் இருப்பதால் பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுருந்த நிலையில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்து கொண்டு இருக்கிறது. ஆசிரியர்கள் உடல் நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் 4-வது நாளாக போராட்டம் சூழலில் அமைச்சர் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு ஆசிரியர்களை அழைத்துள்ளார்.
இதற்குமுன்பு நடக்கப்பட்ட அரசு தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையெல்லாம், உரிய உடன்பாடு ஏற்படாத சூழலில் அமைச்சர் தரப்பில் இந்த பேச்சுவார்த்தை அழைக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் மற்றும் அவர்களுடைய பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்பியுள்ளனர். பேச்சுவார்த்தை முடிந்து அதன் பின்பு தான் போராட்டம் நீடிக்குமா என்று தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர்.
சற்றுமுன் - அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி நியூஸ் தமிழ் தொலைக்காட்சி வீடியோ செய்தி 👇👇👇👇