தமிழகத்தில் ஆசிரியர் நியமனத்தேர்வு ரத்து..அரசுக்கு வலுக்கும் கோரிக்கை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர்களிடம் ஆசிரியர் நியமனத்தேர்வு ரத்து செய்வது குறித்து பேசியுள்ளார்.
நியமனத்தேர்வு:
தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் துறை சார்பாக செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். அதன்படி, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து தனியார் பள்ளிகளில் அதிகரித்து வந்தது.
ஆனால் திமுக அரசின் ஆட்சியில் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. மேலும், தற்போது தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 10,143 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரந்தர பணியாளர்கள் நியமிக்க தேர்வு நடத்தப்படும்.
மேலும், டெட் நியமனத்தேர்வு கொரோனாவுக்கு பிறகு நடத்தப்படாமல் உள்ளது. அரசாணை 149 ஐ ரத்து செய்ய வேண்டும் என்று பலருக்கும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் ஆசிரியர் நியனத்தேர்வு ரத்து தொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.