பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட அழைப்பு
2023-2024ஆம் கல்வியாண்டு குழு உறுப்பினர்களுக்கு வணக்கம்!!
புதிய கல்வியாண்டு (2023-2024) தொடங்கியுள்ளது. பெரும் கனவுகளோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளின் கனவுகளுக்கு உயிரூட்டவும், அதற்காகத் திட்டமிடவும் நம் பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டமானது 09-06-2023-ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) பிற்பகல் 03.00 மணி முதல் 04.30 மணி வரை பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
சென்ற கல்வியாண்டில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தங்களின் வருகையும், சிறப்பான பங்களிப்பும் பாரட்டுக்குரியது. உறுப்பினர்களின் தொடர்ச்சியானப் பங்கேற்பும், ஈடுபாடும் பள்ளியின் வளரச்சி குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் மிக்க உறுதுணையாக இருக்கிறது.
புதிய கல்வியாண்டின் முதல் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது மேலே குறிப்பிட்டுள்ள தேதியில் நடைபெறவுள்ளது. பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கானத் திட்டங்களை உருவாக்கி, தீர்மானங்கள் இயற்றி, பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்கு தாங்கள் தவறாது கூட்டத்தில் பங்கேற்க வேண்டி நம் பள்ளியில் பயிலும் உங்களின் செல்லக் குழந்தை வழியாகத் தங்களைக் இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பதில் நம் பள்ளி பெருமையடைகிறது. தங்களின் பங்கேற்புமிகவும் முக்கியமானது.
இப்படிக்கு,
தலைமையாசிரியர்
பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட அழைப்பாளர்)