ஓடினேன்... ஓடினேன்? TNSEDம் பராசக்தி வசனமும் - இது Latest Parasakthi Dialogue - Teachers News - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Sunday, September 24, 2023

ஓடினேன்... ஓடினேன்? TNSEDம் பராசக்தி வசனமும் - இது Latest Parasakthi Dialogue - Teachers News

 



குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன்

தேர்வுத்தாள் டவுன்லோடு செய்து தேர்வு வைக்கவில்லை என்று,

பல்வேறு EMIS பதிவேற்றங்களை முடிக்கவில்லை என்று.

நீங்கள் நினைப்பீர்கள்; நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று,

இல்லை நிச்சயமாக இல்லை.,

இலவசப் பொருட்கள் பதிவுகளை, கொடுக்காமல் போடச் சொன்னீர்கள் மறுத்தேன்....


உடல்நலக்கூறுகளை பதிவிடச் சொன்னீர்கள். நான் மருத்துவம் படிக்கவில்லை எனச் சொன்னேன்....


வினாத்தாள் பிற்பகல் 2மணிக்கு வரும் என்றார்கள்


தேடினேன், தேடினேன், கிடைக்கவில்லை


பின் EMIS இல் என்றார்கள்


அதிலும் தேடினேன் தேடினேன் கிடைக்கவில்லை,


இப்போது Tnsed என்கிறார்கள்.


Question paper ஐத் தேடித் தேடி அலையவிட்டது யார் குற்றம்.


வலைத்தளத்தின் குற்றமா? இல்லை வலைத்தளத்தை வைத்து மாணவரின் கல்வியுடன் விளையாடிக் கொண்டிருக்கும் வீணர்களின் குற்றமா?


உனக்கேன் இவ்வளவு அக்கறை என்கிறீர்கள்?


நானே பாதிக்கப்பட்டேன்....


நேரடியாக பாதிக்கப்பட்டேன்


வினாத்தாளை தேடித் தேடி வலைத்தளங்களின் பின்னால் ஓடினேன் ஓடினேன் நெட் பேலன்ஸ் தீரும்வரை ஓடினேன்.


சுயநலம் என்பீர்கள்;


என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது.


Question paperக்காக ஆசிரியர்களை இப்படி அலையவிட்டடது யார்குற்றம்?


ஒன்றுக்கும் உதவாத EMIS இன் குற்றமா?


அதை சரியாக வைக்காத EMIS டீமின் குற்றமா?


நிம்மதியாகப் பாடம் நடத்த, தேர்வு நடத்த விட்டார்களா எங்களை?


பதிவிட ஒருநாள் தாமதமானாலும்; பள்ளியின் பெயரை பதிவிட்டு பயமுறுத்திய EMIS COORDINATOR துரத்தினார்,ஓடினேன்....


Memo வரும் என BEO, BRTE, மிரட்டினார்கள் ஓடினேன்....


நேரில் விளக்கமளிக்க வேண்டும் நீங்கள்தான் பொறுப்பு என DEO Online மீட்டிங்கில் அதட்டினார் ஓடினேன்....


இப்படி பேலன்ஸ் தீரும்வரை ஓடவிட்டார்கள்.


இழந்த பேலன்ஸை திருப்பித்தருமா இந்த EMIS டீம்?


இது போன்ற அவலங்கள் தீரும்வரை, அபத்தங்கள் குறையும்வரை அல்லது EMIS வெப்ஸைட்டிலிருந்து விடுதலை கிடைக்கும் வரை என் போன்றோரின் குரல்கள் ஓயப்போவதில்லை....


இதுவே எங்கள் கல்வி நலனென்னும் ஏட்டில் எந்தப்பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு பயனுள்ள கல்வித் தத்துவம்.