ஏற்கனவே 14 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கால தாமதம் செய்வது ஏற்புடையது அல்ல என்பதால் எங்களுடைய இந்த கோரிக்கைஅ நிறைவேறும் வரை தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம் . அதனால் நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் . பயிற்சிக்கு செல்லா ஆசிரியர்கள் பள்ளியையும் புறக்கணித்திடவும் கேட்டுக் கொள்கிறோம் .
நாளை எண்ணும் எழுத்தும் பயிற்சியைப் புறக்கணிப்பது 100% உறுதி.
எந்த தேதியையும் அறிவிக்காமல் தமிழ்நாடு முதலமைச்சர் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க இரண்டு மாதங்கள் கால அவகாசம் கேட்டதால் உடன்பாடு ஏற்படாமல் போராட்டத்தைத் தொடர முடிவு.