தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
விளம்பர எண்: 678
அறிவிக்கை எண் 1/2024
Date : 30-01-2024
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி-IV பணிகள்)
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி-IV பணிகள் இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனத்திற்காக இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. முக்கியமான அறிவுரைகள்!
தேர்வர்கள் தேர்வுக்கான தகுதியை உறுதி செய்தல்:
அனைத்து தேர்வர்களும் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscgov.in-இல் உள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்" மற்றும் இந்த அறிவிக்கையில் உள்ள அறிவுரைகளை கவனமாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் இத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவதற்கான அனைத்து தகுதி நிபந்தனைகளையும் அவர்கள் பூர்த்தி செய்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தேர்வின் அனைத்து நிலைகளிலும் அவர்களது அனுமதி முற்றிலும் தற்காலிகமானது. அவர்கள் தகுதி நிபந்தனைகளை திருப்திகரமாக பூர்த்தி செய்வதற்கு உட்பட்டது. எழுத்துத் தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவது அல்லது தெரிவு செய்யப்பட்டோர் பட்டியலில் தற்காலிகமாக தேர்வரின் பெயர் சேர்க்கப்படுவதால் மட்டுமே. ஒரு தேர்வர் பதவி நியமனம் பெற உரிமை அளிக்கப்பட்டவராக மாட்டார். தேர்வரால் அளிக்கப்பட்ட விவரங்கள் தவறு என்றாலோ தேர்வாணைய அறிவுரைகள் அல்லது விதிகள் மீறப்பட்டுள்ளன என்று கண்டறியப்பட்டாலோ எந்நிலையிலும் தெரிந்தெடுக்கப்பட்ட பின்னர்கூட விண்ணப்பத்தை உரிய நடைமுறைகளுக்குப் பின்னர் நிராகரிக்கும் உரிமை தேர்வாணையத்திற்கு உண்டு. எனவே இத்தெரிவிற்கான விண்ணப்பம் அனைத்து நிலைகளிலும், அதாவது தெரிவு செய்யப்பட்ட பின்னரும்கூட தற்காலிகமானது ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை
ஒருமுறைப் பதிவு மற்றும் இணைய வழி விண்ணப்பம் www.tnpsc.gov.in www.inpscexamsin ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் தேர்வாணைய இணையத் தனத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும். தேர்வர் ஏற்கனவே ஒருமுறைப்பதிவில் பதிவு செய்திருப்பின், அவர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்யத் தொடங்கலாம்.
( PDF File ஐ Download செய்ய கீழே சிவப்பு நிறத்தில் உள்ள Click Here to Download என்பதை கிளிக் செய்யவும். )
Tnpsc Group 4 Detailed Notification PDF
👇👇👇