நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள்!
நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள்!
01.01.2024 நிலவரப்படி 31.12.2022 வரை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து பணிபுரியும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமைப் பட்டியல் இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது . இவ்வுத்தேச மாநில முன்னுரிமைப் பட்டியலை அனைத்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் மூலமாக சார்பு செய்யுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இம்மாநில முன்னுரிமைப் பட்டியலில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் பெயர் , பிறந்த தேதி , ஒய்வு பெறும் தேதி , நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியில் சேர்ந்த நாள் ( முற்பகல் / பிற்பகல் ) , பணியாற்றும் மாவட்டம் , ஒன்றியம் மற்றும் பள்ளியின் பெயர் , தலைமையாசிரியர்களுக்கான EMIS ID மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணிபுரியும் பள்ளியின் UDISE code ஆகிய அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என உறுதி செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் , இப்பட்டியலில் மேற்கண்ட விவரங்களில் ஏதேனும் திருத்தம் , சேர்க்கை , நீக்கம் ஆகியவை இருப்பின் சார்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து உரிய விவரங்களை பெற்று உடன் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்படும் திருத்தம் , சேர்க்கை , நீக்கம் தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் உரிய திருத்தம் செய்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் இறுதி மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது .
( PDF File ஐ Download செய்ய கீழே சிவப்பு நிறத்தில் உள்ள Click Here to Download என்பதை கிளிக் செய்யவும். )
MSHM State Seniority As On 01.01.2024
👇👇👇