தமிழக அரசு குற்ற வழக்குத் தொடர்வுத் துறையில் காலியாக உள்ள ஆபீஸ் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது (அறிவிப்பு எண்- Notice No 1/2024 Dated 18.10.2024). மேலும் இப்பகுதியில் நாம் குற்ற வழக்குத் தொடர்வுத் துறையில் உள்ள ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கான கல்வித் தகுதி, சம்பள விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை பற்றி பார்க்கலாம்.
ஆபீஸ் அசிஸ்டன்ட்
ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு 1 காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது, கல்வித் தகுதியாக 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 15,700 – 58,100 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு General – 32, BC, BCM, MBC & D – 34, SC & ST 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணியிடம் – தர்மபுரி
தேர்வு செய்யும் முறை
குற்ற வழக்குத் தொடர்வுத் துறை ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்க https://dharmapuri.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து உதவி இயக்குனர் அலுவலகம், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை, ஆயுதப்படை பயிற்சி வளாகம், வெண்ணம்பட்டி ரோடு, தர்மபுரி மாவட்டம் – 636 705 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக 5.11.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
( PDF File ஐ Download செய்ய கீழே சிவப்பு நிறத்தில் உள்ள Click Here to Download என்பதை கிளிக் செய்யவும். )
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
👇👇👇