ஆசிரியர் பெயர்
அ.நைனா M.A.,B.Ed.,M.Phil
பதவி
தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மலையனூர் செக்கடி.தண்டராம்பட்டு ஒன்றியம், திருவண்ணாமலை மாவட்டம்.
பணிக்காலம்
1988 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்து மலமஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2004 ஆம் ஆண்டு வரை 16 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி அதன் பின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆத்திப்பாடியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக 2004 முதல் 2005 ஆம் ஆண்டு வரையும் பின்னர் மலமஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2005 முதல் 2007 வரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், பின்னர் 2007 முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சின்னியம்பேட்டையில் தமிழ் பட்டதாரி ஆசிரியராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு மேல்பாச்சார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமையாசிரியராக பதவியேற்று அங்கு 2018 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பணியாற்றினார், பிறகு 2018 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மலையனூர் செக்கடியில் பட்டதாரி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் 1988 முதல் 2025 இன்று வரை தொடர்ந்து 37-வது ஆண்டாய் ஆசிரியர் பணியில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டு வருகிறார்.
சிறப்புகள்
இவருடைய பணிக்காலத்தில் பட்டதாரி தலைமையாசிரியராக மேல்பாச்சர் நடுநிலை பள்ளியில் பணியாற்றிய போது அருகாமை பகுதியிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு உரிய நேரத்தில் வந்து செல்ல பாதுகாப்பான வாகன வசதி இவருடைய பெரு முயற்சியால் கிராம கல்விக்குழு உதவியுடன் செய்து கொடுக்கப்பட்டது. மேலும் பள்ளியில் மாணவர்களின் கணினி அறிவை பெருகச் செய்ய “கால் சென்டர்” வசதி செய்து கொடுக்கப்பட்டது. NMMS தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு தரமான பயிற்சி கொடுக்கப்பட்டதன் விளைவாக அம்மாணவர்கள் கடந்த ஆண்டு வெற்றியும் அடைந்தார்கள். பின்னர் 2018 ஆம் ஆண்டு பணி மாறுதல் பெற்று மலையனூர் செக்கடி நடுநிலைப்பள்ளிக்கு தலைமையாசிரியராக பொறுப்பேற்று INSPIRE அறிவியல் Award தேர்வில் 2019-2020 ஆம் கல்வியாண்டில் 2 மாணவிகளுக்கு தலா ரூ 10000 வீதமும், 2021-2022ஆம் கல்வியாண்டில் 1 மாணவிக்கு ரூ 10000 உதவித்தொகை பெற இவர் வழிகாட்டியாக இருந்தார். குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ 56 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறையுடன் கூடிய இரண்டு பள்ளி கட்டிடம் பெற்றுள்ளார்.
இவ்வாசிரியரின் சேவையை பாராட்டி இவருக்கு, தமிழக அரசு 2025 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை வழங்கியுள்ளது. அதனால் அனைத்து ஆசிரியர் - ஆசிரியைகளும், PTA கழகத்தினரும், SMC உறுப்பினர்களும், மாணவ மாணவிகளும், நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
வாழ்த்துக்களுடன்
asiriyarseithitvm.blogspot.com
www.educationmurasu.in
