அன்புள்ள ஆசிரியர்களுக்கு வணக்கம்,*
*TET தேர்வு குறித்த வாசகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே இந்த சிறப்பு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.*
*1). டெட் தேர்வு நடத்தப்படுமா இல்லையா?*
திட்டமிட்டபடி தமிழக அரசால் நிச்சயம் TET தேர்வு நடத்தப்படும்.
*2). சிறப்பு தகுதி தேர்வு நடத்த வாய்ப்பு உண்டா?*
பல வருடங்களுக்கு முன்னால் பணியில் இருந்த கணினி ஆசிரியர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. அவ்வாறு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கணினி ஆசிரியர்களுக்கு அன்றைய காலகட்டத்தில் வேறு எந்த விதமான தகுதித் தேர்வும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர்களுக்கு என சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வை பொருத்தவரை முன்னதாகவே நடைமுறையில் உள்ளது. எனவே சிறப்பு தகுதி தேர்வாக நடத்தப்படுவதற்கு வாய்ப்பு குறைவு. எனவே அதற்காக காத்திருக்காமல் தற்போதே படிக்க துவங்குவது புத்திசாலித்தனமாகும். ஒருவேளை அரசு கொள்கை முடிவு எடுத்து சிறப்பு தகுதி தேர்வை நடத்தினால் அது ஆசிரியர்களுக்கு போனஸ் மகிழ்ச்சி அளிக்கும்.
*3). சிறப்பு தகுதித் தேர்வை எதிர்த்து வழக்கு தொடுத்தால் அவை ரத்து ஆகிவிடுமா?*
இல்லை, அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் அரிதிலும் அரிதாகவே தலையிடுகிறது. எனவே அதனை ரத்து செய்ய வழக்கு தொடுத்தாலும் அதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால் மேலே கேள்வி இரண்டில் கேட்கப்பட்ட வினாக்கள் நீதிமன்றத்தால் எழுப்பக்கூடும். இயல்பான தகுதி தேர்வை தவிர்த்து சிறப்பு தகுதி தேர்வினை நடத்த அவசியம் என்ன? என நீதிமன்றத்தால் கேட்கப்பட்டால் அதற்கு நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக்கூடிய பதிலை வழங்குவது காலத்தின் கட்டாயம் ஆகும்.
*4). தற்போதைய தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் குறைக்கப்படுமா?*
வாய்ப்புள்ளது. முன்னதாக முதுகலை ஆசிரியர் பணி நியமன தேர்வுகளில் ஆசிரியர்களின் பணி அனுபவத்தை முன்னிட்டு அதற்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட வாய்ப்பு உண்டு. இது அரசின் கொள்கை முடிவு ஆகும். இவர்களுக்கு மட்டும் சலுகையா ? என வழக்கு தொடுக்கப்பட்டாலும் அவ்வழக்கு மிக விரைவாக முடிக்கப்பட்டு அரசின் முடிவிற்கே சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
*5 ) இந்த வயதில் TET தேர்விற்கு படித்தே ஆக வேண்டுமா?*
படிப்பதற்கு எல்லை இல்லை. எந்த பணியில் இருந்தாலும் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக ஆசிரியர்கள் நிச்சயம் படிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
*6). TET தேர்வில் வெற்றி பெறுவது மிக கடினமா?*
மிக மிக எளிது என கூறுவதற்கு விருப்பம் இருந்தாலும், நிதர்சனம் அவ்வாறு அல்ல. சற்று கடினப்பட்டு படித்தால் மட்டுமே வெற்றி பெற இயலும். ஆனால் தொடர்ச்சியாக மாணவர்களுக்குரிய பாடங்களை நடத்தி பல வருட அனுபவம் பெற்ற ஆசிரியர்களாகிய நீங்கள் மிக மிக எளிதாக வெற்றி பெற இயலும் என்பது ஆசிரியர்கள் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளம் ஆகும். எனவே இன்றே படிக்க துவங்குங்கள்.
*7). TET தேர்வு குறித்த அரசின் சீராய்வு மனு முடிவு தெரிந்த பிறகு படிக்கலாமா?"*
தற்போதைய நிலையில் தமிழக அரசு, கேரளா மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்திரபிரதேசம் உட்பட பல மாநில அரசுகளால் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுகின்றன. மேலும் பல மாநிலங்களும் இதேபோன்று தனித்தனியாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். பிரச்சனையின் வீரியம் குறித்து உணர்ந்த உச்ச நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் முதல் கட்டமாக ஒரே வழக்காக பட்டியலிடும். பிறகு வழக்கு குறித்து மீண்டும் விவாதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படலாம். வழக்கின் முடிவு வரும் வரை தற்போதைய தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட (Stay Order) வாய்ப்பு உள்ளது .
*8). TET தேர்வு குறித்த தீர்ப்புக்கு பின், படிக்க துவங்கலாமா?*
இந்த முடிவு மிக மிக தவறானது. படிப்பது என்பது ஆசிரியர்களுக்கு இனிப்பு போன்றது. தற்போதைய தகுதி தேர்வு, அல்லது சிறப்பு தகுதி தேர்வு, அல்லது பணியில் இருப்பவர்களுக்கு தகுதி தேர்வு தேவை இல்லை என எந்த முடிவு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டாலும் அதற்கான கால அவகாசம் மிக அதிகமாகும். அதுவரை காத்திருக்காமல் உடனடியாக படிக்கத் துவங்குவது சால சிறந்தது.
*9). TET தேர்விற்கு எவ்வாறு படிப்பது?*
நீதிமன்றத்தில் வழக்கின் போக்கு செல்லும் பாதையை ஓரளவிற்கு கணிக்க முடியும் வரை படிப்பதில் எந்தவித சுணக்கமும் வேண்டாம். முழு மூச்சாக படிக்கவும்.
அவ்வாறு படிப்பது முதற்கட்டமாக அவரவர் பாடத்தில் உள்ள ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடங்களை முழுமையாக படித்து முடிக்கவும். அவரவர் பாடம் அவரவருக்கு மிக எளிதானது. மேலும் தேர்வு இல்லை என்றால் கூட மாணவர்களுக்கு இதே பாடம் எட்டாம் வகுப்பில் இவ்வாறு கூடுதலாக வரக்கூடும்.