சிறப்பு டெட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு!! - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Sunday, August 23, 2026

சிறப்பு டெட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு!!

ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் பணி செய்யும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வை நடத்தியது.




செப் 10 க்குள் வெளியாகும் என தகவல். 


தமிழ்நாடு முழுவதும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இத்தேர்வில் தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டை எழுதினார்கள்.


இதனிடையில் தேர்வர்கள்  முடிவை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக உயர்நீதிமன்றம் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை விதித்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தடையின் காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் எற்படடாலும் ஆசிரியர் தேர்வு வாரியம் இறுதி விடை குறிப்பை தயார் செய்து அனைத்து ஓஎம்ஆர் விடை தாள்களையும் மதிப்பீடு செய்துவிட்டதாக தகவல்கள் கிடைக்கின்றன.


ஆகவே வருகின்ற 24-ஆம் தேதி தமிழ்நாடு அரசு டெட் தேர்வு மதிப்பெண் குறைப்பு தொடர்பான கொள்கை முடிவை உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கும் போது டெட் தேர்வு முடிவுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.


டெட் தேர்வு முடிவிற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.