உலகில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரிந்து கொள்வோம் - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Saturday, October 24, 2020

உலகில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரிந்து கொள்வோம்

 


உலகில் மொத்தம் 231 நாடுகள் உள்ளன இதில் 192 நாடுகள் ஐநா சபையில் உறுப்பினர்களாக உள்ளனர் 131 நாடுகளில் வலிமை மிக்க நாடுகளாக 10 நாடுகள் உள்ளன. அமெரிக்கா , ரஷ்யா , சீனா ,  ஜெர்மனி , யுனைடட் கிங்டம் எனப்படும் ஒருங்கிணைந்த இங்கிலாந்து , பிரான்ஸ் , ஜப்பான் , நெதர்லாந்து கனடா , இத்தாலி.

             பூமியின் மொத்த பரப்பளவு 510072000 சதுர கிலோ மீட்டர்கள் இதில் 70. 8 சதவீதம் நீராலும 29.2 சதவீதம் நிலத்தால் சூழப்பட்டு உள்ளது. அதாவது நிலப்பரப்பு 14,89,40,000  சதுர கிலோமீட்டர் ஆகும் பரப்பளவு வரிசையில் 99,84,670 சதுர கிலோமீட்டர்  பரப்பளவு கொண்ட ரஷ்யா உலகின் மிகப் பெரிய நாடாக விளங்குகிறது. ஏழாவது இடத்தில் நமது இந்தியா உள்ளது இந்தியாவின் பரப்பளவு 32,87,590 சதுர கிலோமீட்டர்கள்.

           உலக வரைபடத்தில் இலங்கை ஒரு புள்ளியாக காணப்படும் ஆனால் அந்த புள்ளி அளவு கூட தென்படாத சில நாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. உலகில் மிகச் சிறிய நாடாக வாடிகன் விளங்குகிறது உலக நாடுகள் பட்டியலில் சில ஏற்கப்படாத நாடுகளும் உள்ளன அதாவது ஐநா சபையில் உறுப்பினராக அங்கம் வகித்தாலும் சில நாடுகள் பல நாடுகளால் ஏற்கப்படவில்லை. இதற்கு உதாரணம், சைப்பிரஸ் , கொரியா குடியரசு போன்ற நாடுகள். இந்த நாடுகள் உலக இறையான்மைக்கு எதிரானவை என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது.