TET தேர்வில் தேர்ச்சி பெற்றால், வாழ் நாள் முழுதும் பணியில் சேரும் வாய்ப்பு - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Saturday, October 24, 2020

TET தேர்வில் தேர்ச்சி பெற்றால், வாழ் நாள் முழுதும் பணியில் சேரும் வாய்ப்பு



டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், வாழ் நாள் முழுதும் பணியில் சேரும் வாய்ப்பு குறித்த முதல்வரின் பரிந்துரையை, விரைவில் மத்திய அரசு ஆணையாக பிறப்பிக்க உள்ளது, என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங் கோட்டையன்கூறினார். 

ஈரோட்டில் அவர் கூறியதாவது: 

ஆசிரியர் தேர்வு எனப்படும், டெட் தேர்வில், பாஸ் செய்யும் ஆசிரியர்கள், எழு ஆண்டுகளுக் ஆசிரியராக சேர தகுதி படைத்தவர்கள். அவ்வாறு பணியில் சேர முடியாதவர்கள், தங்கள் தேர்வு சான்றிதழ் தகுதி காலத்தை நீட்டிக்க  வேண்டும் என, கோரினர்.

இதையடுத்து, முதல் வர் கடந்த மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதி, 'தகுதி தேர்வு சான்றிதழுக்கான கால நீட்டிப்பை தரும்படி கோரினார்

இதன்படி, தற்போது ஒரு முறை, டெட் தேர் வில் தேர்ச்சி பெற்றவர் வாழ்நாள் முழுதும் ஆசிரியர் பணி பெறு வதற்கு, தகுதி படைத்த வர் என்ற ஆணையை விரைவில் மத்திய அரசு பிறப்பிக்க உள்ளது இதன் மூலம், ஆசிரி யர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற் றப்பட்டுள்ளது. இவ் வாறு, அவர் கூறினார்