கணிதத்துக்கும் அறிவியலுக்குமுள்ள தொடர்பு - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Wednesday, October 28, 2020

கணிதத்துக்கும் அறிவியலுக்குமுள்ள தொடர்பு

                                       


   

  அறிவியல் (Science), இயற்பியல் தொடர்பான நூல்களிலும் அளவை அடிப்படையான பிரச்சினை களை ஆய்வதற்குக் கணிதம் பயன்படுகின்றது. மிகச் சிக்கலான கருத்துகளைக் கூடத் தெளிவாகவும், சுருக்க மாகவும் எழுதுவதற்குக் குறியீடுகள் உதவுகின்றன அறிவியல் ஆய்வுமுறைகளுக்கும், முடிவுகளுக்கும் கணிதம் பெரிதும் பயன்படுகிறது. சூத்திரங்களைப் பயன்படுத்துதல் வெகுவாகப் பழக்கத்தில் வந்துவிட்ட காரணத்தால் அவற்றை ஏற்படுத்துவதில் பயன்பட்ட கணிதத்தின் முக்கியப் பங்கு பொதுவாகப் பாராட்டப்படுவதில்லை. 

                                      உதாரணமாக, பரப்பளவு, கனஅளவு இவற்றைக் காணப் பயன்படும் சூத்திரங்கள் மறைமுக மாக அளப்பதற்கு உதவும் கோண கணிதச் சூத்திரங்கள் இயங்கும் பொருள்களின் வேகத்தைக் காண உதவும் சூத்திரங்கள் போன்றவை மிக முக்கியமானவையாகும் ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துவந்த ஆங்கில அறிவியலாள்ரான மாக்ஸ்வெல் (Maxwell) என்பவர் மின்னியல் விதிகளைப் (Electrical Theory) பற்றிய கருத்துகளைக் கணித முறைகளைக் கொண்டே விளக்கியுரைத்தார். கம்பியில்லாத் தந்தி, ரேடியோ இவற்றின் வளர்ச்சியில் இவை பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை அப்போது அவர் அறிந்திருக்க இயலாது. நுண்கணிதத்தைக் கண்டு பிடித்தவர்களான நியூட்ட னும், லிபினிட்ஸும் இன்று நாம் அவற்றைப் பற்பல விதங்களில் பயன்படுத்துவதைக் கண்டு வெகுவாக வியப்படையக்கூடும். 

                                              அறிவியலில் மனிதனின் சிந்தனையைப் புதிய வழிகளில் திருப்பக் கணிதம் பெரிதும் உதவுகிறது. 17ஆம் நூற்றாண்டு அறிவியலில் கணிதச் சார்பலனைக் கொண்ட விதிகளும், சூத்திரங்களும் நிறைந்திருந்தன. டேகார்டே, கலீலியோ, ஹைகன்ஸ் (Huyghens), கெப்லர், நியூட்டன், லிபினிட்ஸ் முதலிய கணித மேதைகள் இந்த விதிகளைக் கண்டறிந்தவர்களுள் முக்கியமானவர்கள். பொதுவாக, அறிவியல் பிரச்சினைகள் கணித ஆராய்ச்சியைத் தொடர்வதற்கு வழிகோலுகின்றன புதிய கணிதக் கண்டுபிடிப்புகளுக்கு இவை தொடக்கமாக அமைகின்றன.