மக்களால் மக்களுக்காக மக்களை கொண்டே ஒரு நூலகம் - நூலகர் இல்லாத அதிசய நூலகம் - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Saturday, October 24, 2020

மக்களால் மக்களுக்காக மக்களை கொண்டே ஒரு நூலகம் - நூலகர் இல்லாத அதிசய நூலகம்

 


சென்னை திருமுல்லைவாயலில் வெங்கடாசலம் நகரில் இருக்கிறது ஆர் எஃப் எல் Read and Return Library நூலகம் இது ஒரு நூதன நூலகம் புத்தகங்கள் மட்டுமே இருக்கும் நீங்கள் வீட்டிற்கு எடுத்த போய் படித்து விட்டு அதே இடத்தில் கொண்டு வந்து வைத்து விடவேண்டும். இப்படி ஒரு நவீன உலகத்தை அமைத்தவர் மகேந்திர குமார் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கடந்த 2015ஆம் ஆண்டு முப்பது புத்தகங்களுடன் தொடங்கிய இந்த சிறு நூலகம் முயற்சி தமிழகத்தில் 123 இடங்களில் பரந்து விரிந்திருக்கிறது 

       உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு இலவச பாடநூல் புத்தகங்கள் கிடைக்கவும் இணையதளம் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது . நான் தொடங்கினாலும் முதலில் அதில் கவனம் கொண்ட நல் உள்ளங்களின் பேர் ஆதரவாக இயக்கமாக வளர்ந்து இருக்கிறது புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வீட்டில் வீணாக கிடக்கும் புத்தகங்களை வீதிக்கு கொண்டு வந்து மக்களுக்கு பயன்பட வைக்கவும்  RFL நூலகம் தொடங்கப்பட்டது என்கிறார் கே ஆர் மகேந்திர குமார்.

மக்களால் மக்களுக்காக மக்களை கொண்டே என்ற நோக்கத்துடன் நடத்தப்படும் இதனை ஆளில்லா நூலகம் என்று அழைக்கலாம் நூலகத்திற்கு தனியாக கட்டிடம் நாற்காலிகள் மேஜைகள் எதுவும் கிடையாது மேற்பார்வைக்கு ஆட்கள் கிடையாது கட்டணமும் கிடையாது வேலை நேரம் இல்லை 24 மணிநேரமும் செயல்படக் கூடியது படிக்க எடுத்துப் போன புத்தகத்தை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம் எடுத்த இடத்திலேயே திருப்பித் தர வேண்டாம் நீங்கள் செல்லும் ஊரில் RFL நூலகம் இருந்தால் அங்கே கொடுத்துவிடலாம் இது ஒரு நம்பிக்கையின் பேரில் இயங்கும் நூலகத் திட்டம் மக்களை புத்தகத்தினால் இணைக்கும் சமூக சேவை.