செயல்முறைப் பயன்கள் (Practical Values)
செயல்முறை முக்கியத் துவத்திற்காகக் கணிதம் கற்பிக்கப்படுகிறது. ஆரம்ப எண் கணிதத்தின் அடிப்படைக் கருத்துகளை கூட அறியாமல் வெகு சிலரே வெற்றிகரமாகக் காலம் கடத்த லாம். நம்முடைய இன்றைய நாகரிகத்தின் தனித்தன்மை கணிதத்திற்கு மறைமுகமாகக் கடமைப்பட்டுள்ளது. நவீன எண்ணங்களும் வாழ்க்கைத் தன்மையும், கணிதத்தை அடிப் படையாகக் கொண்டமைந்த அறிவியல் வளர்ச்சிக்கும், தொழில் நுட்பக் கலைகளுக்கும் கடன்பட்டுள்ளன.
கணிதம் அறிவியல்கள் அனைத்திலும் தலைசிறந்ததாகும். கணித அறிவில்லாமல் அறிவியலை அறிந்து கொள்ள இயலாது நம் வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் கணிதம் கூடவே வருகின்றது. பொதுவாகக் கணிதத்தின் தன்மையையும், விகிதம் சதவீதம், வேகம் முதலியவற்றையும், எழுத்துக் கணிதம் வடிவியல், கோண கணிதம் ஆகியவற்றைப் பற்றியும் மக்கள் பேசும்போது அவற்றின் பொருளை மாணவர்கள் அறிந்திருப்பது நன்று. செய்தித்தாள்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவரும் வானவெளி அல்லது கப்பல் போக்குவரத்து வானொலி, டெலிவிஷன், தொழில் நுட்பம் தொடர்பான விளம்பரங்களிலுள்ள எளிய சூத்திரங்களையும் வரை படங்களையும் ஒருவன் புரிந்து கொள்ள முடியாமல் போகும் போது, வாழ்வெனும் படியில் கற்றலின்றி இருப்பதை உணருவான். ஆகவே, மாணவர்கள் கணிதம் பயில வேண்டி யதன் நோக்கம் அவர்கள் அறிவியலைத் தெரிந்து கொள்ளவும், தேவைக்கேற்றவாறும், சுவைக்காகவும், அறிவியல் துறைகளை மென்மேலும் அறிவதற்குமேயாகும். அறிவியலின் எந்தப் பிரிவுமே கணித முறைகளைக் கொண்டிராமல் இல்லை.
பற்பல அளவீடுகளும், அவற்றில் பயன்படுத்தப்படும் கணக்கீடு முறைகளும் அறிவியலோடு பின்னப் பட்டிருக்கின்றன கலீலியோவின் கணித வாதங்களிலிருந்தும் சிரத்தையோடு அவர் எடுத்த அளவீடுகளிலிருந்தும் உருவாதே இன்றைய இயற்பியலாகும். அவ்வாறே லவாய்சியருடைய (Lavoisier) அளவறி பகுப்புகளிலிருந்து (quantitative analysis) இன்றைய வேதியியல் உருவாக்கப்பட்டது.
இதயத்தின் பரிமாணம், இரத்த ஓட்டம் பற்றிய ஹார்வியின் கணக்கீடுகளாலும், அளவீடுகளாலும் இன்றைய உடலியல் உருவாகியுள்ளது. பொருள்களின் இயக்கங்களைக் கூர்ந்து கவனித்து வந்த நியூட்டன் சில கணிப்பு முறைகளின் தேவையை முன்னிட்டு நுண்ணியலைக் கண்டுபிடித்தார். இயற்பியல் (Physics) நிபுணர்களுக்கு உயர்கணிதத்தில் முழுமையான பயிற்சி அளிக்க வேண்டும். உயிரியல் விஞ்ஞானி கள், உடல்நூல், பாரம்பரியக் கோட்பாடுகள், மருத்துவம் பொதுநலத் துறை போன்றனவற்றில் கணித முறைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
மனிதனுடைய வாழ்க்கை நடவடிக்கைகளில் புள்ளி விவரங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. உடல் நலம், சமூகவாழ்வு, தொழில், கல்வி சம்பந்தமான பிரச்சினைகளை நன்றாகப் புரிந்து கொள்ளவும் கணிதமானது பயன்படுகிறது எண்ணற்ற புள்ளிவிவரங்களை ஒரே கண்ணோட்டத்தில் தெளிவாகப் புரியும்படி செய்யக் கணிதம் பயன்படுகிறது பணம் சம்பந்தப்பட்டவற்றில் ஆர்வமுள்ள மனிதனுக்கு அடிப்படைக் கணிதம் முக்கியமானதொரு கருவியாக விளங்குகின்றது. மேலும், புத்திக்கூர்மையுள்ள குடிமகனுக் குரிய உரிமைகளையும், கட்டுப்பாடுகளையும் புரிந்து கொள்வதற்கும் கணிதம் அத்தியாவசியமாகின்றது. எனவே வரலாற்றுக் காலந்தொட்டு பொதுக் கல்வியில் கணிதத்தை ஒரு முக்கியமான பகுதியாகச் சேர்த்திருக்கின்றார்கள்.