கணிதமும் உயிரியலும் - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Wednesday, October 28, 2020

கணிதமும் உயிரியலும்

 


       உயிரினங்களில்  வெவ்வேறு தசைநார்கள் எவ்விதம் இயங்குகின்றன என்பதையும், நுண்ணுயிர்களும், நோய்க் கிருமிகளும் எவ்விதம் பெருகுகின்றன என்பதையும், மற்றும் பிறப்பு மூலத்தைப் பற்றிய புதிர்கள் பலவற்றையும், நோய்க் கிருமிகள், உடல் அணுக்கள் முதலியவற்றின் உருவளைவு களையும், இரத்த அழுத்தம், நாடித் துடிப்பு ஆகியவற்றையும் கணிப்பதற்குக் கணித முறைகளே பயன்படுத்தப்படுகின்றன

உதாரணமாக


1. முட்டையிலுள்ள சத்துப் பொருள்கள், 66% நீர், 13% புரோட்டீன், 10% கொழுப்பு, 11% தாது உப்புகள் நம் உடலின் எடையில் 100-க்கு 9 பங்கு இரத்தத்தின் எடையாகும். 1 க.மி.மீ. இரத்தத்தில் ஏறக்குறைய 50,00,000 சிவப்பு அணுக்கள் (red corpuscles) இருக்கும். சிவப்பணுக்களை விட வெள்ளணுக்கள் உருவில் சற்று பெரியவை. ஆனால் எண்ணிக்கையில் குறைவானவை. ஒரு க.மி.மீ. இரத்தத்தில் ஏறத்தாழ 5,000 வெள்ளணுக்கள் காணப்படும். 

        பிளாஸ்மா இரத்தத்தின் திரவப் பகுதியாகும். இது வெளிறிய மஞ்சள் நிறமுடையது. இரத்தத்தில் 100-க்கு 55 பகுதியாக இருப்பது இதுதான் வயது வந்த மனிதருக்கு (உடல் வெப்பநிலை 98.4 °F) ஒரு நிமிடத்திற்கு 72 முறை இதயத்துடிப்பு ஏற்படும். கைக் குழந்தைகளுக்கு 140 முறை இதயத் துடிப்பு ஏற்படும் பொதுவாக, உடம் பின் வெப்பநிலை 1° கூடினால் இதயத் துடிப்பு 10 அதிகரிக்கும்