புவியின் மேற்பரப்பில் கிடையாக நகருகிற வாயுவே காற்று என அழைக்கப்படுகிறது. சில நேரங்களில், காற்றை நம்மால் உணர முடியாதவாறு மிக மெதுவாகவும், மென்மையாகவும் வீசுகிறது அல்லது வேகமாகவும், வலிமையுடனும் வீசி கட்டிடங்களின் மீது மோதித்தாக்குதல், பெரிய மரங்களை கீழே சாய்த்தல் போன்ற செயல்களை புரிகிறது. சூறாவளி காற்று கப்பலைகளை சேதப்படுத்துகிறது; புயல்மழை, நிலங்களை வெள்ளநீரில் மூழ்கடிக்கிறது. வறண்ட காற்று, பயிர் நிலங்களிலுள்ள வளமான மண்ணை முழுவதுமாக அரித்தெடுத்து, அம்மணலை அவ்விடத்திலிருந்து கடத்தி விடுகிறது. அதற்குப் பின்னர் அந்த நிலத்தில் பாறை துண்டுகள் மட்டுமே மிஞ்சுகிறது. அத்தகைய வேளாண் நிலங்களில் பயிர்களை மீண்டும் சாகுபடி செய்வது முடியாத ஒன்றாகும் எனவே, காற்று ஓரிடத்தின் மேற்பரப்பை அரித்தெடுத்து, அரித்தவைகளை கடத்தி, கடத்தியவைகளை வேறொரு இடத்தில் படிய வைக்கிறது
1.அரித்தெடுத்தல் :
ஓடுகிற நீர் மற்றும் நகருகிற பனிகட்டி ஆகிய அரித்தல் காரணிகளுடன் ஒப்பிடும் பொழுது காற்றின் அரித்தல் செயல் முக்கியமானது அல்ல. பாலைவனங்களில் காற்றினால் உருவாகிற நிலதோற்றங்களில் ஒருசில மட்டுமே முக்கிய மானதாகக் கருதப்படுகிறது. காற்றின் செயல்பாடுகளை வறண்ட மற்றும் பாதி வறண்ட பகுதிகளில் மட்டுமே காணலாம் என்கிற வரையரை ஏதும் கிடையாது. எனினும், அத்தகைய பகுதிகளில் காற்று மிகச் செம்மையாக செயல்படுகிறது. ஈரமிக்க பகுதிகளில் காணப்படுகிற மண்துகள்கள் மிகவும் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருகும். மேலும், அப்பகுதியிலுள்ள தாவரங்களின் வேர்கள் நங்கூரம் போல செயல்பட்டு, அந்த மண்ணை அங்கேயே தக்க வைத்துக் கொள்கிறது. எனவே அப்பகுதிகளில் காற்றின் அரித்தெடுத்தல் செயல்பாடு குறிப்பிடும்படியாக இருப்பதில்லை. ஓரிடத்தில் காற்று திறமையாகச் செயல்பட வேண்டுமெனில் அவ்விடத்தில் வறட்சியும் சொற்பமான தாவரங்களும் அவசியமாகின்றன அச்சூழ்நிலையிலுள்ள பொருள்களை காற்று அரித்தெடுத்து, அதை அங்கிருந்துக் கடத்தி விடுகிறது. கடத்திய நயமான பொருள்களை வேறொரு இடத்தில் படியவும் வைக்கிறது
காற்று இரு வழிகளில் பொருள்களை அரித்தெடுக்கின்றன அவையாவன:
(அ) புடைத்தெடுத்தல் மற்றும்
(ஆ) உராய்ந்துத் தேய்த்தல்
(அ) புடைத்தெடுத்தல் (by deflation):
காற்று புடைத்து எடுத்தல் மூலமாக பொருள்களை அரித்தெடுப்பது ஒரு வகை ஆகும். அதாவது, கெட்டிப்படாமல் மிகவும் தளர்வாக இருக்கிற பொருள்களை தூக்கி, அப்பொருள்களை அங்கிருந்து அகற்றி விடுவதாகும். பெரும்பாலும், சில இடங்களில் புடைத்தெடுத்தல் செயல்பாட்டின் விளைவாக ஆழமற்ற பள்ளங்களே காணத்தக்க அளவில் அமைந்திருக்கும். இவற்றை ஊதுபள்ளங்கள் (Blow Outs) என அழைப்பதே சால சிறந்தது. இவை ஒரு மீட்டர் ஆழமும் மூன்று மீட்டர் அகலமும் கொண்ட சிறு குழியிலிருந்து ஐம்பது மீட்டர் ஆழமும் பல கிலோ மீட்டர் அகலமும் கொண்ட பெரும்பள்ளம் வரை காணப்படுகிறது. ஊதுபள்ளங்களின் ஆழத்தை அந்தப் பகுதிகளில் காணப்படும் அடிநில நீர்மட்டமே கட்டுபடுத்துகிறது. ஊதுபள்ளங்கள அடிநில நீர்மட்டம் வரை தாழ்கிறபொழுது, அம்மட்டத்தில் காணப்படுகிற ஈரத்தினாலும் தாவரங்களினாலும் அப்பள்ளங்களின் வளர்ச்சித் தடைபடுகிறது.
(ஆ) உராய்த்து தேய்த்தல்:
ஆறுகள் மற்றும் பனியாறுகள் போலவே காற்றும் பொருள்களை உராய்த்து தேய்க்கிறது. காற்று கொண்டு வருகிற மணல், வறண்ட மற்றும் கடலோர பகுதிகளில் வெளியே தெரிகிற பாறைகளில் மோதி அவற்றை தேய்க்கின்றன. இவ்வாறு பாறைகளை உராய்த்து தேய்ப்பதால் உருவாகிற கற்களை பட்டைக்கற்கள் (Ventifacts) என அழைக்கிறோம். காற்று வீசுகிற திசையை நோக்கி இருக்கிற கல்லின் பக்கம், அக்காற்று எடுத்து வருகிற பொருள்களினால் உராய்த்து தேய்க்கப்படுகிறது. அதனால் அக்கற்கள் வழுவழுப்பாகவும், குண்டுகுழியுடன் கூர்மையான விளிம்பு கொண்டவைகளாக மாறுகின்றன. மாறிய அந்த கற்களை அங்கேயே விட்டுச்செல்கிறது. காற்று வீசும் திசை நிலையற்றதாக இருக்கும் வேளைகளிலும், கூழாங்கற்கள் அவற்றின் காற்று முகத்திசையை திருத்தி அமைத்துக் கொண்டாலும் அத்தகைய கற்கள் பல பட்டை பரப்புகளைக் கொண்டதாக காணப்படுகின்றன.
2. கடத்துதல் :
ஓடுகிற நீரை போலவே, நகருகிற காற்றிலும் கொந்தளிப்பு ஏற்படலாம். அந்நேரங்களில் காற்று, தளர்ந்த கற்கூளங்களை அதனுடன் எடுத்துச் செல்லக் கூடிய திறனை பெறுகிறது. எனவே, அக்கற்கூளங்களை வேறொரு இடத்திற்கு கடத்திச் செல்கிறது. ஒரு ஆற்றில் அதிகரிக்கிற வேகத்தைப்போலவே, புவியின் மேற்பரப்பில் இருந்து உயரம் அதிகரிக்க அதிகரிக்க காற்றின் வேகமும் அதிகரிக்கிறது. மேலும் ஆற்றைப் போலவே காற்றும் நயமான பொருள்களை தொங் குச்சுமையாகவும், சிறிது கனமாக பொருள்களை படுகைச்சுமையாகவும் கடத்திச் செல்கிறது. எனினும், ஓடுகிற. நீருடன் ஒப்பிடும் பொழுது காற்றினால் கடத்தப்படும் படிவுகள் இரண்டு வகைகளில் வேறுபடுகிறது. முதலாவதாக, நீரை காட்டிலும் காற்றின் அடர்த்திக் குறைவு. ஆதலால் உருநயமற்ற பொருள்களை எடுக்கவோ அல்லது கடத்தவோ தேவைப்படுகிற அளவிற்கு காற்றுக்கு திறன் கிடையாது. அடுத்ததாக, வாய்கால் போன்று வரையறுக்கப்பட்ட ஒரு எல்லைக்குள் காற்று வீசுவதில்லை. எனவே, காற்று சுமந்து வருகிற பொருள்கனை பெரும்பரப்புகளில் படியவைக்க முடிகிறது. இப்பொருள்களை சில நேரங்களில் காற்று அதிக உயரத்திற்கு எடுத்துச் சென்று வளிமண்டலத்திற்கு உள்ளேயும் புகுத்தி விடுகிறது.
(1) படுகைச்சுமை:
காற்று எடுத்துச்செல்கிற படுகைச்சுமை மணல் துகள்களால் ஆனது. அம்மணல் துகள்களை தூக்குகிற அளவுக்கு அங்கே வீசுகிற காற்றின், வேகம் போதுமானதாக இருப்பின், அந்த மணல் துகள்கள் அக்காற்றில் நகர துவங்குகின்றன. முதலில், மணலை புவியின் மேற்பரப்பை ஒட்டி உருட்டுகிறது. அப்பொழுது மணல் துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால், அந்த ஒரு துகள் அல்லது இரண்டு துகள்களுமே, காற்றில் தாவி குதிக்கின்றன. இவ்வாறு காற்றில் கலக்கிற மணல் துகள்களை அக்காற்றே முன்நோக்கி எடுத்துச் செல்கிறது. முன்நோக்கி நகரகிற மணல்துகள்கள், புவிஈர்ப்பு விசையினால் நிலப்பரப்பை நோக்கி மீண்டும் இழுக்கப்படும் வரை அத்துகள்கள் காற்றில் நகர்ந்தவாறு இருக்கின்றன. இதனால் அந்நிலபரப்பை நோக்கி விழுகிற மணல் துள்ளி குதித்து மீண்டும் காற்றுடன் கலக்கிறது. அல்லது இதர மண் துகள்களை இடம் பெயர செய்கிறது. இடம் பெயருகிற மண் துகள்களும் மேல் நோக்கிக் குதிக்கின்றன. இத்தகைய எதிர்செயல்கள் ஒரு சங்கிலி தொடராக நிலைக்கிறது. இவ்வாறு திடீரென இயங்குகிற மணல்துகள்கள், நிலபரப்பிற்கு வெகு அண்மையிலுள்ள காற்று மண்டலத்தில் சிக்கி ரமாகவே கலந்து விடுகின்றன
காற்றில் தாவி குதித்துச் செல்கிற மணல் துகள்களால், புவியின் மேற்பரப்பிலிருந்து அதிக உயரத்திற்கு செல்ல முடிவது இல்லை. காற்று அதிக வலுவுடன் வீசும் காலங்களில்கூட திடீரென இயங்குகிற மணல் துகள்களை ஒரு மீட்டர் உயரத்திற்கு மேல் கொண்டு செல்ல முடிவதில்லை. காற்று சாதாரணமாக வீசும் காலங்களில், இம்மணல்துகள்களை அக்காற்று அரை மீட்டருக்கும் குறைவான உயரத்திலேயே எடுத்துச் செல்கின்றன சில மணல் துகள்கள், மற்ற பொருள்களின் தாக்கத்தினால் காற்றில் கலக்க இயலாதவாறு அவற்றின் அளவு பெரிதாக இருக்கிறது. இச்சூழ்நிலையில், திடீரியக்க அணல் துகள்களின் தாக்கத்திலிருந்து வெளிப்படுகிற இயக்க ஆற்றலே பெரிய மணல் துகள்கள் முன்னோக்கி நகர்த்துகிறது. இவ்விதமாகவே மணல் 'புயலில் சுமார் 20 லிருந்து 25 சதவீதம் வரையிலான மணல் கடத்தப்படுவதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
(அ) மணல் புயல் (Sand Strom):
மணல் புயல் பாலைவனம் களுடன் தொடர்புக் கொண்டவை. அதிவேகமாக வீசுகிற காற்று மணல் துகள்களை காற்று மண்டலத்தில் கலந்து விடுகிறது. இந்த மணல் துகள்களால் கண்ணாடிகளில் விரிசல்கள் ஏற்படுகின்றன. மேலும், தானியங்கி ஊர்திகளிலும் (Automobile) இதர உலோக அல்லது மர பலகைகளிலுள்ள வர்ணத்தை சுரண்டுகிற அளவிற்கு ஏற்ற ஆற்றலுடன் அம்மணல் துகள்கள் காற்றிவால் நகர்த்தப்படுகின்றன. புயல் காற்றிலுள்ள மவல் துகள்கள், நிலத்திலிருந்து 3 மீட்டருக்கும் மேல் காணப்படுவது அரிதாகும்; ஆனால் அரிதாக, சில நேரங்களில் 15 மீட்டருக்கும் மேல் காணப்படலாம். பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாக தோன்றுகிற மணல் புயல்கள், நம்மை நெருங்க நெருங்க, நன்றாக வரையறுக்கப்பட்டு வளர்ச்சியடைந்த பழுப்பு நிற சுவர் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. பெரும்பாலும், பகல் நேரத்தில் நிலத்தின் மீது நிலவுகிற வெப்பமிகுதியின் காரணமாக தோன்றுகிற மணல் புயல்கள், இரவுநேரத்தில் மறைந்து விடுகிறது
(i) மிதவைச்சுமை:
மணலை போலன்றி தூசுகளை காற்று, வளிமண்டலத்தில் அதிக உயரத்திற்கு எடுத்துச் செல்கிறது காற்றினால் நயமான பொருள்களை மிக எளிதாகக் கடத்த முடிகிறது. ஆனால் அப்பொருள்கள் சுழலுகிற அக்காற்றுக்கு இயல்பாகக் கிடைப்பதில்லை. ஏனெனில், நிலத்திற்கு அருகாமையிலுள்ள காற்றின் வேகம் பூஜ்ஜியமாக இருக்கிறது எனவே, காற்றினால் இயல்பாக எந்தவொரு படிவு பொருளையும் தூக்க இயலாது. தூசுகளை காற்று கடத்திச் செல்ல வேண்டுமாயின், அந்த துாசுக்கள் நிலபரப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் அல்லது காற்று மண்டலத்திற்குள் வீசப்பட வேண்டும். இதை, கிராமத்திலுள்ள கப்பி போடாத வறண்ட மண் சாலையில் சுழல் காற்று வீசுகிற ஒரு நாளை எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்கலாம். கிராமத்து மண் சாலையில் படிந்துள்ள தூசுகள் கலையாத வரையில் அத்தூசுகளை சொற்ப அளவிலேயே அக்காற்றினால் மேலெழுப்ப முடிகிறது. எனினும், ஒரு ஊர்தியோ அல்லது ஒரு வண்டியோ அக்கிராம சாலையில் செல்லும் போது, அச்சாலையில் ஏற்கனவே படிந்துப்போன அந்த நயமான படிவு அடுக்கு கலைக்கப்படுவதால், தூசுபடலம் ஒன்று மேலேழுகிறது. மேலேழுகிற தூசுபடலத்தை அங்கு வீசுகிற காற்று எளிதாக கடத்திச் சென்று விடுகிறது (அ) புழுதிப்புயல் (Dust Storm) : புழுதிப்புயல்கள் வேளாண் நிலங்களுடன் தொடர்பு கொண்டவை. வறட்சிக் கூறுகளுக்கு ஆட்படுகிற அல்லது வறண்டு போகிற வேளாண் நிலங்களில் புழுதிப்புயல்கள் உருவாகின்றன. மேலெழுகிற காற்று வறண்ட மண்ணை நூற்றுக்கணக்கான தூரத்திற்கு தூக்கி எடுத்து, அதைக் கடத்திச் செல்கிறது. அவ்வாறு கடத்தப்படுகிற மண்ணின் நிறத்தைப் பொறுத்து அவற்றை தூக்கிச் செல்கிற அக்காற்று கறுமையாகவோ, செந்நிறமாகவோ அல்லது மஞ்சள் கலந்த பழுப்பாகவோ தோற்றமளிக்கும். தூசுக்களிலுள்ள நயமான பொருள்கள், இறுக்கமாக பூட்டிய வீடுகள், இயந்திரப்பகுதிகள், பூட்டிய அலமாரிகள் என அனைத்தையும் ஊடுருவி அவற்றின் மீது புழுதியாகப் படிந்து விடுகிறது. பற்களின் இடையே மணல் நெருடுவதை புழுதிக்காற்று வீசுகிற வேளைகளில், உட்புறம் தாழிட்ட வீட்டிற்குள் இருக்கிற மக்களால்கூட உணர முடிகிறது.
படிய வைத்தல்:
காற்றின் அரித்தெடுத்தலினால் உருவாகும் நிலத்தோற்றங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதில்லை. ஆனால் சில பகுதிகளில் காற்றினால் படிய வைக்கிற படிவுகளினால் உருவாகிற நிலத்தோற்றங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. உலகிலுள்ள வறண்ட பகுதிகளிலும் மணற்பாங்கான கடலோரங்களிலும் காற்றினால் குவிக்கப்படுகிற படிவுகள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன காற்று படிவுகள் இருவிதமானவை.
அவையாவன:
(அ) மணல் குன்றுகளும்
(ஆ) காற்றடி வண்டலும்.
(அ) மணல் குன்றுகள் (Sand Dunes) :
ஓடுகிற நீரைபோல, காற்றுக்கும் வேகம் குறைகிறது. எனவே, அக்காற்றுக்கு பொருள்களைக் கடத்தும் திறனளவும் குறைகிறது. அவ்வாறு குறையும் பொழுது அக்காற்று சுமந்து வரும் பொருள்களை அங்கேயே விட்டுச் செல்கிறது. காற்று வீசும் திசையில், தடைஏதும் இருப்பின் அத்தடை அக்காற்றின் முன்நகர்வை தடுப்பதால் அதன் வேகம் குறைகிறது. அதனால் அக்காற்றினால் எடுத்து வரப்படுகிற பொருள்கள் அந்த தடைக்கு அருகிலேயே குவிக்கப்படுகின்றன. பெரும் பரப்புகளில் போர்வைப் போன்று தோற்றமளிக்கிற பல வகையான சேற்று படிவுகளைப் போல அல்லாமல், காற்று எடுத்து வருகிற மணலை அக்காற்று ஒரு குன்று போல படிய வைக்கிறது. இதையே 'மணல் குன்று என அழைக்கிறோம்.
மணல் குன்றுகளின் உருவாக்கம் காற்று வீசுகிற திசையில் கொத்தாக அமைந்துள்ள தாவரங்கள் அல்ல பாறை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எதிர்கொள்ளலாம். ஆகவே காற்று, அங்குள்ளவற்றை சுற்றியோ அல்லது அவற்றின் மீதோ வீசத் துவங்குகிறது. எனவே எதிர்படுகிற தடைக்குப் பின்புறத்தில் மெதுவாக நகருகிற காற்று-மறைவு பகுதி ஒன்றையும், அதே தடையின் முன்புறத்தில் சிறிய அளவில் காற்று-அமைதிப் பகுதி ஒன்றையும் அங்கு வீசும் காற்று விட்டுச் செல்கிறது காற்றின் போக்கில் குதித்து தாவிச் செல்கிற மணல் துகள்களில் சில, அக்காற்றின் மறைவு பகுதியில் வந்து தங்குகின்றன. அதுபோல மணல் தொடர்ந்து தங்கும்போது அம்மணல், வீசுகிற காற்றிற்கு பெருந்தடையாக அமைகிறது. அதுவே மேலும் மணலை குவிப்பதற்கு ஏற்ற பயனை தருகிற ஒரு பொறியின் (A Trap) அமைப்பைப் போன்று செயல்படுகிறது. போதுமான அளவு மணலும், தேவையான காலம் வரை நிலையாக வீசுகிற காற்றும் இருக்குமேயானால், அந்த இடங்களில் மணல் குவிந்து வளர்ந்து ஒரு மணல் குன்றாக மாறுகிறது. மணல் குன்றுகள் மூன்று வகைப்படும்
(i) பிறை மணல் குன்றுகள் (Barchan Dunes) :
வரையறைக்கு உட்பட்ட மணல் படிவுகளும், சொற்ப தாவரங்களுடன் சமமான திடமான நிலப்பரப்புகளும் காணப்படுகிற இடங்களில் பிறை மணல் குன்றுகள் உருவாகின்றன. பிறை வடிவுடன். கீழ் நோக்கிய முனைகளையும் கொண்டிருக்கிற தனித்த மணல் குன்றை பிறை மணல் குன்று என அழைக்கிறோம். காற்று வீசுகிற திசை நிலையாக இருப்பின் இம்மணல் குன்றின் முனைகள் சீராக அமையும். ஆனால் காற்று வீசும் திசைக்கு நேரடியாக பொருத்தா விடில், மணல் குன்றின் ஒரு முனை மற்றொரு முனையை விட நீளமாக அமையும்.
(ii) குறுக்கு மணல் குன்றுகள் (Transverse Dunes):
கோள்காற்றுகள், ஒரே சீராக வீசுகிற போதும், மணல், அபரிமிதமாக இருக்கிற போதும். மிக சொற்பமாக அல்லது தாவரங்களற்ற நிலப் பரப்புகளில், குறுக்கு மணல் குன்றுகள் நீண்டத் தொடராக வரிசையாக உருவாகிறது. இவை கோள்காற்று வீசும் திசைக்குச் செங்குத்து கோணத்தில் உருவாகின்றன. இவையே குறுக்கு மணல் குன்றுகள்' அழைக்கிறோம். பெரும்பாலும், கடலோரத்திலுள்ள மணல் குன்றுகள் இவ்வடிவத்திலேயே காணப்படுகின்றன. (ii) நீள்மணல் குன்றுகள் (Longitudinal Dues): நிலையான காற்று திசையும், படிகிற மணல் வரையறைக்கு உட்பட்டும் இருப்பின், அப்பகுதிகளில் நீள்மணல்குன்றுகள் (Longitudinal Dunes) தோன்றுகிறது. இவை காற்று வீசும் திசைக்கு இணையாக அமைவதால், இக்குன்றுகள் மணலால் ஆன தொடர்களை போல காட்சியளிக்கின்றன. இவையே நீள்மணல் குன்றுகள் என அழைக்கப்படுகின்றன
(ஆ) காற்றடி வண்டல் (Loess) :
உலகில் சில பகுதிகளில் உள்ள மேற்பரப்பு நிலத்தோற்றம் காற்றினால் கொண்டு வரப்பட்ட படிவுகளினால் மூடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, புழுதிப் புயல்களினால் கொண்டு வரப்பட்டு படிய வைக்கப்படுகிற பொருள்களை காற்றடி வண்டல் என அழைக்கிறோம். இந்த படிவு பொருள்களுக்கு பாலை வனங்களும் பனியாற்றுப் படிவுகளும் முக்கிய ஆதாரங்களாக உள்ளன. உலகத்திலுள்ள காற்றடி வண்டல் பகுதகளிலிலேயே மிகப் பரந்தும் விரிந்தும் காணப்படுகிற காற்றடி வண்டல் மேற்கு மற்றும் வடக்கு சீனாவில் உள்ளது. இது சுமார் 30 மீட்டர் பருமனை கொண்டது. இதன் நிறத்தின் காரணமாகவே சீனாவிலுள்ள மஞ்சளாறும் (Hawang Ho) மஞ்சள் கடலும் அப்பெயர்களை பெற்றன. சீனாவில் 800,000 ச.கி.மீ பரப்பிலுள்ள காற்றடி வண்டலுக்கு மத்திய ஆசியாவின் பாலைவனப்பரப்பே ஆதாரமாகும். சீனாவிலுள்ளது போலன்றி அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் ஐரோப்பாவில் காணப்படும் காற்றடி வண்டல் பனியாற்றின் மறைமுக செயலினால் தோன்றியதாகும். இந்த காற்றடி வண்டலுக்கு பனியாற்று படுகைகளில் படிந்த பனிக்குவியலே ஆதாரமாக இருக்கிறது ஏனெனில், இங்குள்ள காற்றடி வண்டலில் இயல்பாகவே சிதைந்துபோன பொருள்கள், பனியாற்றின் உராய்ந்தரித்தல் செயலினால் உருவாகும் பாறைமாவை ஒத்துள்ளது.
Thank you
-----------------------------------------------------------------------------------------------------------------------------