பெருங்கடல் பற்றி அறிந்து கொள்வோம் ! - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Thursday, December 31, 2020

பெருங்கடல் பற்றி அறிந்து கொள்வோம் !

 புவிப்பரப்பில் சுமார் 360 மி.ச.கி.மீ. பரப்பு, பெருங்கடல் பரப்புகளாக உள்ளன. இப்பரப்புகளே மாபெரும் நீர்தேக்கங்களாக இருக்கின்றன. இதிலுள்ள நீரின் அளவு, புவியினுடைய மொத்த நீரின் அளவில் 97% ஆகும். உலகத்திலுள்ள பெருங்கடல்களின் ஆழம் சராசரியாக 3.9 கி.மீ. இருக்கலாம். எனினும் சில கடல்களின் ஆழம் 11 கி.மீ.க்கும் மேலாக காணப்படுகின்றன புவிப்பரப்பில் பெருங்கடல்களும் கண்டங்களும் சீரற்று பரவி உள்ளது. வட அரைக்கோளத்தில் நிலம் மற்றும் பெருங்கடல் விகிதம் 1:1.5 எனவும் தென் அரைக்கோளத்தில் நிலம் மற்றும் பெருங்கடல் விகிதம் 1:4 எனவும் இருக்கிறது. தென் அரைக்கோளத்தில் பரவியுள்ள அதிகப்படியான நீர்பரப்பினால் அப்பகுதியின் சுற்றுப்புறச்சூழலில் பல பயனுள்ள விளைவுகள் ஏற்படுகின்றன.




உலகிலுள்ள பெருங்கடல்கள் மூன்று பிரிவுகளாக வகையீடு செய்யப்பட்டுள்ளன. 

அவையாவன

 (1) பசிபிக், 

(2) அட்லாண்டிக் (ஆர்டிக்கடல் உட்பட) மற்றும்

 (3) இந்திய பெருங்கடல் 



பெருங்கடல்களுள், பசிபிக் மிகப்பெரிது. இது அட்லாண்டிக் கடலைக்காட்டிலும் இரு மடங்கு பெரிது. புவிப்பரப்பில் 13 பங்கு, பசிபிக்கடலினால் மூடப்பட்டுள்ளது. புவியின் மொத்த நீரில் பாதியளவு, பசிபிக்கடலில் உள்ளது. இதன் சராசரி ஆழம் 43 கி.மீ. ஆகும். இப்பெருங்கடல் ஆழமற்ற எல்லையோரக் கடல்கள் சிலவற்றைக் கொண்டுள்ளது. ஆனால் இக்கடலில் பல தீவுகள் உள்ளன. பசிபிக் பெருங்கடலில் ஒரு சில ஆறுகளே வந்து கலக்கின்றன. இக்கடலின் வந்து கலக்கிற ஆறுகளின் வடிகால் பரப்பைக் காட்டிலும் பசிபிக்கின் மேற்பரப்பு சுமார் 100 சதவிகிதம் அதிகமாகும். அடுத்ததாக, அட்லாண்டிக் மிகப் பெரிய கடலாகும். இக்கடல் கண்டங்களுக்கு இணையாக அவற்றின் இடையே அமைந்துள்ள அகலமற்ற ஒரு நீர்பரப்பாகும். ஆழமற்ற கடல்கள் பலவற்றை அட்லாண்டிக் கொண்டுள்ளது. இவற்றுள் கரீபியன், பால்டிக் ஆர்க்டிக் மற்றும் மெக்ஸிகோ வளைகுடா ஆகியன குறிப்பிடதக்கவை. பல சிற்றாறுகளும், ஆறுகளும் பெரும் சுமைகளை கொண்டுவந்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கின்றன. உலகிலுள்ள மிகப் பெரிய ஆறுகளான அமேசான் மிஸிஸிபி, செயின்ட்லாரன்ஸ் மற்றும் காங்கோ முதலானவை அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கின்றன


உலகிலுள்ள பெருங்கடல்களுள், இந்தியப் பெருங்கடலே மிகச்சிறிதாகும். இக்கடல் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியக் கண்டங்களினால் சூழப்பட்டுள்ளது. இதில் ஒரு சில தீவுகளும் ஆழமற்ற கடல்களும் அமைந்துள்ளன. இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கோட்டிற்கு அருகாமையில் அமைந்திருப்பதால் இக்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாக உள்ளது. மேற்கூறிய மூன்று பெருங்கடல்களை தவிர தென் அரைக் கோளத்தில் 55 தென் அட்சரேகையில் அமைந்துள்ள நீர் பரப்பு அனைத்தையும் மொத்தமாக தென் பெருங்கடல்கள் (Southern Oceans) crest அழைக்கிறோம். இதன் மொத்த பரப்பில் பாதிக்கும் மேலே, குளிர்காலத்தில் பனிகட்டியால் மூடப்பட்டிருக்கும். பெருங்கடல் நிலத்தோற்றம் பெருங்கடல்களிலுள்ள நிலத்தோற்றங்கள் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது .அவையாவன:

 (அ) கண்ட திட்டு

(2) கண்ட சரிவு 

(3) பெருங்கடல் தாழ்ச்சி


(1) கண்ட திட்டு (Continental Shelf) : 

கண்ட எல்லைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள பெருங்கடல் பகுதியை கண்ட திட்டு என்கிறோம். பெருங்கடலில் கண்ட திட்டு 150-200 மீ. ஆழம் வரை காணப்படுகிறது. அதுபோலவே அதன் அகலமும் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. அகன்ற கண்டதிட்டுகள் மிகச் சிறந்த மீன்பிடி தளங்களாகும். ஏனெனில் கண்டதிட்டு பிளாங்டன்கள் செழித்து வளர தேவையான சூழலை கொண்டிருக்கிறது. பிளாங்டன்கள் மீன்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன. ஆதலால் கண்டதிட்டுகளில் மீன்களும் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றன. எடுத்துக்காட்டாக, வட அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை, ஐரோப்பாவின் வடமேற்குக் கடற்கரை மற்றும் ஜப்பான் தீவுகளை சுற்றியுள்ள கண்டதிட்டுப் பகுதிகள் சிறந்த மீன்பிடி தளங்களாக உள்ளன


(2) கண்ட சரிவு(Continental Slope): 

கண்டதிட்டை அடுத்து பெருங்கடலின் தரையை நோக்கிச் செங்குத்தாக சரிகிற பகுதி கண்டசரிவாகும். இது கண்டதிட்டையும், ஆழத்திலுள்ள கடல் தரையையும் இணைக்கிறது. இதன் ஆழம் சராசரியாக 3000 - 6000 மீட்டர் வரை வேறுபடுகிறது. கண்டசரிவு முடிவடையும் பகுதியில், பெருங்கடலில் ஆழம் திடீரென அதிகரிக்கிறது.


(3)பெருங்கடல் தாழ்ச்சி (Ocean trough): 

கண்டசரிவு பெருங்கடல் தாழ்ச்சியாக முடிவடைகிறது. இது கடலடியிலுள்ள ஆழமான நீரடிசமவெளி போன்றது. இதில் மலைதொடர்களும், கடலடியிலுள்ள மற்றொரு தோற்றமான ஆழ்கடல் சமவெளி நம்புவதற்கு இயலாதது. இது ஏற்றதாழ்வுகள் ஏதுமின்றி ஒரே மாதிரியான நிலபரப்பைக் கொண்டதாகும். இப்பரப்பில் புதைந்துப்போன எரிமலையின் உச்சிப்பகுதிகள் ஆங்காங்கே நீட்டிக் கொண்டிருக்கும். ஆழ்கடல் சமவெளிகள் - எல்லா பெருங்கடல்களிலும் உள்ளன. எனினும், பசிபிக் பெருங் கடலைக் காட்டிலும் அட்லாண்டிக் பெருங்கடலில் மிகப் பரந்த ஆழ்கடல் சமவெளிகள் பல உள்ளன. கடல்நீரின் இயல்பு மற்றும் வேதி பண்புகள்


பெருங் கடல்களும், கடல்களும் உவர் நீரையே கொண்டுள்ளன. இந்நீரி கரைகிற தன்மைக்கொண்ட வாயுக்களும் சிறிய அளவில் உள்ளன. இவ்வாயுக்களும் வளிமண்டலத்தில் இருந் பெறப்படுகின்றன. பெரும்பாலும், கடல்நீரினால் கரைக்கப் படுகிற வாயுக்களின் அளவுகளை, அந்நீரின் வெப்ப நிலையும் அதன் உப்பளவுமே நிர்ணயிக்கின்றன. கடல்நீரில் வெப்பநிலை மற்றும் உப்பளவு அதிகரிக்குமேயானால், அந்நீரினால் கரைக்கப்படும் வாயுக்களின் அளவு குறையும்


கடல்நீரில் கரைந்துள்ள வாயுக்களில் முக்கியமானவை; நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு, ஆர்கான் லியம் மற்றும் நியான். மற்ற வளிமண்டல வாயுக்களுடன் ஒப்பிடும் பொழுது அசாதாரணமாக, கார்பன் டைஆக்ஸைடு கடல்நீரில் மிக அதிகமாக கரைந்துள்ளது.


பல்வேறு உப்புகளும் நீரும் கலந்த ஒரு கலவையே கடல் நீராகும். சுமார் 99% கடல் உப்புகள் ஆறு வகை தனிமங்களாலும், சேர்மங்களாலும் ஆனவை. அவையாவன. குளோரின். சோடியம் சல்பர், மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம். கடல் நீரில் காணப்படும் 50% உப்பளவில் குளோரின் அயனிகளே முக்கிய பங்கு வகிக்கிறது.

கணிதமும் உயிரியலும் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது.


I . பெருங்கடல் நீரோட்டங்கள்


ஒரு நீர்நிலையின் மேற்பரப்பில் காற்று குறுக்காக வீசும் பொழுது, அந்நீர் நகரத் துவங்குகிறது. முதலில் (Capillary Waves) நுண் அலைகளாக தோன்றி, தூரிகைக்கீறல் (brush stroke) போன்ற சிற்றலைகளாக நீர் பரப்பில் உருவாகின்றன. அந்நீர்பரப்பில் தொடர்ந்து காற்று வீசுமேயானால் அப்பொழுது அப்பரப்பில் பெரிய அலைகள் தோன்றுகின்றன. இந்த அலைகளின் உந்துவிசை அக்கடல்நீருக்கு கடத்தப்படுவதால் அந்நீர் நகரத் துவங்குகிறது. நகருகிற நீரையே நீரோட்டங்கள் என (Currents) அழைக்கிறோம் இவ்வாறாக, பெருங்கடலில் பெருங்கடல் நீரோட்டங்கள் இருவகைப்படும். அவையாவன 

(அ) மேற்பரப்பு நீரோட்டம், 

(ஆ) ஆழ்கடல் நீரோட்டம்


(அ) மேற்பரப்பு நீரோட்டம்:

 புவிப்பரப்பின் மீது நிலவுகி வெப்ப மாறுபாடுகளினால் கோள்காற்றுகள் உருவாகின்றன் ான் ஏழாவது வகுப்பில் படித்தோம். புவிப்பாப்பின் மீது 0க காற்றுகள் தொடர்ந்து நீடிக்கும் இயல்புக் கொண்டவை. ஆதலால் இக்காற்றுகள் பெருங்கடல் பரப்புகளின் மீது நிலையான fரோட்டங்களை உருவாக்குகின்றன. கோள் காற்றுகள் போலவே கொரியோலிஸ் விசையினால் (Coriolis) மேற்பரப்பு ரோட்டங்கள் வட அரைக்கோளத்தில் கடல்நீர் காற்று வீசும் திசைக்கு வலதுபுறம் திருப்பப்படுகிறது. நிகர விளைவு மேற்பரப்பு நீரோட்டங்கள், காற்றுவீகும் திசைக்கு 45° கோணத்தில் நகருகின்றன.


உலகளவில், பெருங்கடல்களை சூழ்ந்துள்ள நிலப்பரப்புகள் அந்நீரோட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன. எனவே, மேற்பரப்பு நீரோட்டங்கள் ஒரு வட்டவடிவில் முழுமையான வளர்ச்சியை பெறுகின்றன. அத்தகைய வளர்ச்சிக்கு பெருங்கடல்களின் எல்லைகளாக அமைந்துள்ள கண்டப் பரப்புகளே காரணமாக இருக்கின்றன. வட்டவடிவில் உருவாகிற மேற்பரப்பு நீரோட்டமே சுழல்(Gyre) என அழைக்கப்படுகிறது


ஒரு சுழலின் அமைப்பு: 

ஒரு சுழலில் நான்கு வகையான ரோட்டங்கள் உள்ளன. அவை இரண்டிரண்டாக இணைக்கப்பட்டு காணப்படுகின்றன. அவையாவன: (ஆ) வடக்கு-தெற்காக கண்ட எல்லைகளுக்கு இணையாக பாய்கிற இரண்டு எல்லை நீரோட்டங்கள். மற்றும் (ஆ). கிழக்கு-மேற்காக பாய்கிற இரண்டு எல்லை நீரோட்டங்கள். இதிலுள்ள இரண்டு நீரோட்டங்களும் முறையே, சுழலின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் பாய்கின்றன. அட்சக்கோடுகளுக்கு இடையே வெப்ப ஆற்றலை பரப்புவதில் எல்லைநீரோட்டங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. துணை வெப்பமண்டல - சுழல் ஒன்றை எடுத்துக்காட்டாக கொண்டு நீரோட்டங்களின் இயக்கங்களை புரிந்துக் கொள்ளலாம்


அ. துணைவெப்பமண்டல சுழல்: 

துணை வெப்ப மண்டல பகுதியில் 30° வட மற்றும் தென் அட்சக்கோடுகளில் மைந்துள்ள பெருங்கடல்கள் ஒவ்வொன்றிலும் பெரிய அளவில் ஒரு சுழல் அமைந்துள்ளது. இச்சுழல்களில் காணப்படும் நீரோட்டங்கள், துணை வெப்பமண்டல உயரழுத்த | தொகுதிகளினால் தோன்றுகிற வளிமண்டல கோள்காற்றினால் முன்நோக்கி நகர்த்தப்படுகின்றன.


மேற்கு எல்லை நீரோட்டங்கள் : 

நிலநடுக்கோட்டிலிருந்து உயர் அட்சங்களை நோக்கி பாய்கிறது நீரோட்டங்கள் மேற்கு எல்லை நீரோட்டங்கள். பொதுவாக, இந்த நீரோட்டங்கள் அனைத்தும் நாளொன்றுக்கு 40-120 கி.மீ. வரை ஜெட் போன்று பீறிட்டுப் பாய்பவை. மேற்பரப்பு நீரோட்டங்களில், மேற்கு எல்லை நீரோட்டங்களே மிக ஆழத்தில் செல்லக்கூடிய நீரோட்டங்களாகும். இவை பெருங்கடல் பரப்பிற்கு கீழே சுமார் ஆயிரம் மீட்டர் ஆழம் வரை விரிவடைகின்றன. இத்தகைய வெப்ப நீரோட்டங்கள் அவற்றின் அமைவிடத்தைப் பொறுத்து சிறப்பான பெயர் க ளை கொண்டுள்ளன. 

1) வட அட்லாண்டிக் கல்ஃப் நீரோட்டம்,

 2)வட பசிபிக்-கியூரோஷியோ

3 ) தென் அட்லாண்டிக்-பிரேசில், 

4)தென் பசிபிக்-கிழக்கு ஆஸ்திரிலேயா, 

5) இந்திய பெருங்கடல் அகுல்ஹாஸ் நீரோட்டம்


ii) கிழக்கு எல்லை நீரோட்டங்கள் : 

உயர் அட்சத்திலிருந்து நில நடுக்கோட்டை நோக்கி பாய்கிற நீரோட்டங்கள் கிழக்கு எல்லை நீரோட்டங்கள் ஆகும். கிழக்கு எல்லை நீரோட்டங்கள் அகலமானவை; ஆழமற்ற பகுதியில் நாளொன்றுக்கு மூன்றிலிருந்து ஏழு கி.மீட்டர் வேகத்தில் பாய்கின்றன. இந்த குளிர்நீரோட்டங்கள் அவற்றின் அமைவிடத்தைப் பொறுத்து சிறப்பான பெயர்களை கொண்டுள்ளன. 

1)வட அட்லாண்டிக் கானரி; 

2)வடபசிபிக்-கலிபோர்னியா;

 3)தென் அட்லாண்டிக் பெங்குலா, 

4)தென்பசிபிக் பெரு; 

5) இந்தியப்பெருங்கடல் மேற்கு ஆஸ்திரேலிய நீரோட்டம்


iii) கிழக்கு-மேற்கு நீரோட்டங்கள்: 

வட அரைகோளத்தில், மேற்கு எல்லை நீரோட்டங்கள் சுமந்து வருகிற நீரை, கிழக்கு நோக்கிப் பாய்கிற வடபசிபிக் நீரோட்டமும், வடஅட்லாண்டிக் நீர்பிரிவும் கிழக்கு எல்லை நீரோட்டங்கள் துவங்குகிற இடத்திற்கு எடுத்துச் செல்கின்றன. அதுபோலவே, தென் அரை கோளத்தில் கிழக்கு எல்லை நீரோட்டங்கள் சுமந்து வருகிற நீரை, தென் பசிபிக் நீரோட்டமும், தென் இந்திய நீரோட்டமும் தென் அட்லாண்டிக் நீரோட்டமும் மேற்கு எல்லை நீரோட்டங்கள் துவங்குகிற இடத்திற்கு எடுத்துச் செல்கின்றன


வட அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் 50 வடக்கில் சிறிய சுழல்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் காணப்படும் நீரோட்டங்கள், துருவ தாழ் அழுத்த மையத்தினால் உருவாகிற காற்று சுழற்சியினால் ஏற்படுகின்றன. இவ்வாறான சுழல்கள் தென் அரைகோளத்தில் வளர்ச்சிப் பெறுவதில்லை ஏனெனில், அப்பகுதியில் பாய்கிற நீரோட்டங்களை தடுத்து அவற்றின் திசையை திருப்பும் அளவிற்கு நிலப்பரப்புகள் பெரிதாக அமையவில்லை. ஆ) ஆழ்கடல் நீரோட்டங்கள்: உலகிலுள்ள பெருங் கடல்களில் அதன் மேற்பரப்புக்குக் கீழேயும் நீரோட்டங்கள் பாய்கின்றன. ஆழ்கடல் நீரோட்டங்கள் கடல் நீரின் அடர்த்தி வேறுபாடுகளினால் இயக்கப்படுகின்றன. பெருங்கடல்களின் வெப்பநிலையும், உப்பளவும் மாறுபடுவதால் அந்நீரின் அடர்த்தி வேறுபடுகிறது உயர் அட்ச கோடுகளில் மிகக் குறைந்த வெப்பநிலை நிலவுவதால் அங்கு கடல் நீரின் அடர்த்தி அதிகமாக இருக்கும். இதனால் அங்கு கடல்நீர் மிகவும் குளிர்ந்து ஆழ்கடல் அகழிகளை நோக்கிக் கீழிறங்குகிறது. இவ்வாறு கீழிறங்குகிற குளிர்நீரையே ஆழ்கடல் நீரோட்டம் என அழைக்கிறோம். இந்நீரோட்டங்களே, பெருங்கடலிலுள்ள நீரில் 90% நீரை ஆக்கிரமித்து உள்ளன. ஆழ்கடல் நீரோட்டங்கள் கொரியோலிஸ் விசையினால் பாதிப்படைவதில்லை.


பொதுவாக, மேற்பரப்பு நீரோட்டங்களுடன் ஒப்பிடும் பொழுது ஆழ்கடல் நீரோட்டங்கள் மிக மெதுவாகவே ஒடுகின்றன. இதைத் தவிர பெருங்கடல் தரையில் காணப்படுகிற நிலவெளித் தோற்றங்களான தொடர்களும், பள்ளங்களும் ஆழ்கடல் நீர் ஒட்டத்தைத் தாமதப்படுத்துகின்றன. ஆழ்கடல் நீரோட்டம் அதன் ஒட்ட பாதையில் ஒரு சுற்றை முழுமையாக முடிக்க சுமார் 1000 வருடங்கள் ஆகலாம் என கணக்கிடப்பட்டுள்ளது


III. பவளத் தொடர்கள்


 தனித்துக் காணப்படும் பவள உயிரினங்கள் பாலிப்புகள் என அழைக்கப்படுகின்றன இப்பாலிப்புகளின் கூட்டமே பவளம் எனப்படுகிறது. இந்த பவளபாலிப்புகள் ஒவ்வொன்றும் ஒரு முதன்மை பாலிப்பில் இருந்து ஒரே அச்சாக உருவானவைகளே. மில்லியன் மில்லியன் கணக்கான பாலிப்புகளின் கூட்டங்களும், சுண்ணாம்பைப் படிய வைக்கிற மற்ற உயிரினங்களும் சேர்ந்து அவற்றின் முன்னோடிகளின் எலும்பு கூடுகளின் மேல், அவற்றின் உள்ளே வளர்ச்சிப் பெறுகின்றன. இவ்உயிரினங்களும், மணலும் சேறும் சேர்ந்து பவளத் தொடர்கள் உருவாகின்றன. பவளதொடர்கள் வளருகிற இடங்களை பொறுத்து அவை, கண்ட திட்டு விளிம்புகளில் நாடாதொடர் எனவும், கண்ட சரிவுகளில் மேடை தொடர் எனவும், கண்ட தீவுகள் அல்லது முதன்மை அரண் கண்ட பகுதிகளையொட்டி விளிம்பு தொடர் எனவும் அழைக்கப்படுகின்றன.

வெப்ப மற்றும் துணை வெப்ப மண்டல பெருங்கடலின் நீர்பரப்பில், பவளதொடர்கள் செறிந்துக் காணப்படுகின்றன பெரும்பாலான பவளயினங்களுக்கு 18 முதல் 30 செ. வரை வெப்பநிலை தேவைபடுகிறது. இந்த வெப்பநிலை வீச்சு எல்லையிலிருந்து கடல்நீரின் வெப்பநிலை மாறுபட்டு, அதே வெப்பநிலை வெகு காலத்திற்குத் தொடருமேயானால் பவள தொடர்கள் பாதிக்கப்படுகின்றன; பவளபாலிப்புகளும் மடிந்துப் போகின்றன.

உலகில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரிந்து கொள்வோம்

பவளங்களின் பரவல்: 

வெப்ப மண்டலத்திலிருந்து துருவ மண்டலம் (மேப்பு11.3) வரை, உலகிலுள்ள பெருங்கடல்களில் எல்லாம் பவளங்கள் பல வகைகளில் காணப்படுகின்றன. மேற்கு அட்லாண்டிக் மற்றும் இந்திய-பசிபிக் பெருங்கடல்களின் வெப்ப, துணை வெப்பப்பகுதிகளில் பவள தொடர்களை கட்டுவிக்கிற பவளங்கள் சிதறி காணப்படுகின்றன. பொதுவாக வட மற்றும் 30 தென் அட்சக்கோடுகளுக்கு இடையே காணப்படுகின்றன


அ. மேற்கு அட்லாண்டிக் தொடர்களிலுள்ள பெர்முடா, பஹாமாஸ், கரிபியன் தீவுகள், பிலைஸ், ஃப்ளாரிடா மற்றும் மெக்ஸிகள் வளைகுடா


ஆ. இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதியில் செங்கடலும் இந்திய பெருங்கடலும், பசிபிக் பெருங்கடல் வழியாக பெர்சியன் வளைகுடாவிலிருந்து மேற்கு பனாமா கடலோரம் வரை அடங்கும். கலிஃர்னியாவில் சில இடங்களில் கடலில் நீட்டி கொண்டிருக்கும் பாறைகளின் மீதும் பவளம் வளருகிறது.

பவள தொடர்களின் முக்கியத்துவம் : வளிமண்டலத்தில் காணப்படுகிற கார்பன் டை ஆக்ஸைடு வாயுவின் அளவை நிர்ணயிப்பதில் பவள தொடர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சூசான்தேல் என்ற கடற்பாசி காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை ஒளிச்சேர்க்கையின் மூலமாக அகற்றி விடுகிறது. அதனால் சூசான் தேல் பாசிக்கும் பவள பாலிப்புக்கும் தேவையான உணவுப்பொருள் கிடைக்கிறது. கடைசியாக காற்றிலிருந்து அகற்றப்படுகிற கார்பன் டைஆக்ஸைடு வாயுவின் பெரும்பகுதி, பவள பாலிப்புகளால் சுண்ணாம்பாக உற்பத்தி செய்யப்பட்டு, அச்சுண்ணாம்பு கடலடியில் தங்கி விடுகின்றன எனினும், சூசான்தேல் பாசியும் பவளபாலிப்புகளும் சுவாசிக்க ஆக்ஸிஜனை (மனிதர்கள் தங்களின் சுவாசித்தலுக்கு ஆக்ஸிஜனை பயன்படுத்துவது போன்று) பயன்படுத்துகின்றன. இச்செயலினால் வளிமண்டலத்திலும் பெருங்கடலிலும் கார்பன் டைஆக்ஸைடு செலுத்தப்படுகிறது. இரவில் சுவாசிக்கும் பொழுது வெளியேறுகிற கார்பன் டைஆக்ஸைடின் அளவை காட்டிலும் பகலில் ஒளிசேர்க்கையின் பொழுது வெளியேறுகிற ஆக்ஸிஜனின் அளவு அதிகமாகும். ஆனால் இரவில் ஒளிச்சேர்க்கை முழுவதுமாக நிறுத்தப்பட்டு சுவாசிப்பது மட்டுமே நடைபெறுகிறது. பவள தொடர்கள் காற்றில் செலுத்துகிற கார்பன் டைஆக்ஸைடு அளவை காட்டிலும், அத்தொடர்கள் அக்காற்றிலிருந்து அகற்றுகிற கார்பன் டைஆக்ஸைடு அளவு அதிகமாகும்


புவியினுடைய காலநிலை இயல்பாகவே மாற்றமடைந்து வருகிறது. ஆதலால், புவியின் வெப்பநிலையும் கூடுதலாகிறது பவள தொடர்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை வீச்சு எல்லையில் மட்டுமே வளரக்கூடியவை. எனவே, வெப்பநிலை மாற்றங்கள் அவற்றின் உடல் நலனை பாதிக்கின்றன. கடல்நீரில் வெப்பநிலை கூடும் பொழுது பவளங்கள் வெளிறி (சூசான்தேல் பாசியின் இழப்பு) போகின்றன. வெண்மையான பவளங்கள் மடிகின்றன. பவளங்களிலிருந்து சூசான்தேல் பாசி கட்டாயமாக வெளியேற்றப்படும் பொழுது அப்பவளம் வெளிறி போகிறது. இக்கடற்பாசியின் மூலமாகவே ஒளி சேர்க்கை நடைபெறுவதால், பவளங்களும் இதர உயிரினங்களும் வளர்ச்சி ப்பெற முடிகிறது. பாலிப்புகளிலிருந்து சூசான்தேல் வெளியேற்றப்படும்பொழுத அப்பவளங்கள் வெண்மை நிறத்தை அல்லது வெளிறி போன தோற்றத்தைப் பெறுகின்றன


சில நேரங்களில் மனித-செயல்களினால் இயற்கையில் காணப்படுகிற மிக நுட்பமான சமநிலை சீர்குலைந்து விடுகிறது. பெரும்பாலும் பெருங்கடல்களில் நடைபெறும் நிகழ்வுகள் பெருமளவில் மனிதர்களால் கட்டுபடுத்தப்படுகின்றன நிலத்திலிருந்து ஓடிவருகிற நீரில், கலந்திருக்கிற செயற்கை உரங்கள் கடலில் கலக்கின்றன. ஆதலால், சத்துக்கள் அதிகரித்து குறிப்பிட்ட சில தாவரங்கள் நைட்ரஜனால் செழித்து வளரருகின்றன. அவை செயற்கை உரங்களில் இருந்து பெறுகிற நைட்ரேட்டைக் கொண்டு, அபரிமிதமாக வளருகின்றன. இவை பெருங்கடலில் வாழ்கிற ஏனைய உயிரினங்களை வளரவிடாமல் அழிக்கின்றன


மேலும், ஒரு குறிப்பிட்ட சத்து மட்டுமே அதிகரிப்பதால் உயிரினப்பன்மையும் குறைந்து விடுகிறது. எடுத்துக்காட்டாக கடல்நீரில் நைட்ரஜனின் அளவு அதிகரித்தால், அதை உட் கொண்டு, வெகுவேகமாக வளர்ந்து மற்ற கடல் வாழ் உயிரினங்களை அழிக்கிற பாசிகள், கடலுக்கு அடியில் ஏராளமாக உள்ளன. இப்பாசிகள் சூசான்தேல் பாசியின் ஒளிசேர்க்கைக்குத் தேவையான சூரிய வெளிச்சத்தை மறைத்து விடுகின்றன. வேளாண் உரங்களின் ஓட்டத்துடன், பஞ்சாயத்துக் கழிவுகள், சாக்கடைத் தொட்டியிலிருந்து கழிவுநீர் ஒழுகல் மற்றும் இதர கழிவுகளும் கடலில் வந்து சேருவதால் வேண்டாத சத்துக்கள் அதிகரிக்கின்றன. தேவைக்கு மேலாக நடைபெறுகிற மீன்பிடிப்பு நிலைமையை மேலும் மோசமடைய செய்கிறது. பாசிகளை உணவாகக் கொள்கிற மீன்கள் பெருமளவில் பிடிக்கப்பட்டு கொல்லப்படுவது ஏராளமாக நடைபெறுகிறது. எனவே, பவளத் தொடர்கள் குறுகிய காலத்திலேயே அழிந்து போகும் அபாயம் உள்ளது.

THANK YOU

----------------------------------------------------------------------------------------------------------------------------