9, 10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 2020-2021-ஆம் கல்வியாண்டில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு
12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மே 3 ஆம் தேதியிலிருந்து தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதேபோல் இந்த ஆண்டும் 9, 10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.