மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த சிறுவன், கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 1,000 ரூபாயை அனுப்பி வைத்துள்ளான்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை பெரும் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் பன்மடங்காக அதிகரித்து வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்கள் கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுதவிர ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.இந்தநிலையில் ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த 2ம் வகுப்பு மாணவன், ஹரிஸ் வர்மன், கொரோனா நிவாரண நிதியாக 1,000 ரூபாயை முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளான்.
தனது சேமிப்பிலிருந்து அந்த தொகையை டிடி எடுத்து அனுப்பி வைத்துள்ள சிறுவன், முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கூறி பென்சிலில் கடிதமும் எழுதியுள்ளான்.அதில் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும்படியும் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளான். சிறுவனின் இந்த செயலை அறிந்த பலரும் பாராட்டி வாழ்த்துக்கூறி பதிவிட்டு வருகின்றனர்.