11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தலாம் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், ஒரே பாடப்பிரிவில் அதிக விண்ணப்பம் வந்தால் 9ஆம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பாடப்பிரிவு ஒதுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி ஆணையரின் Revised Proceedings 👇👇👇