சாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்!. எப்படி விண்ணப்பிப்பது? - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Wednesday, June 9, 2021

சாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்!. எப்படி விண்ணப்பிப்பது?

 சாதி , வருமான , இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்.



 நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுக்கா அலுவலகம் செல்ல வேண்டாம் அனைத்து சான்றிதழ்களும் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்.


வருமான சான்றிதழ் 

ஜாதி சான்றிதழ்

 இருப்பிடச் சான்றிதழ்

 வாரிசு சான்றிதழ் 

முதல் பட்டதாரி சான்றிதழ்

 வேலையில்லா பட்டதாரி சான்றிதழ்

 விதவை சான்றிதழ் 

கணவனால் கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்

 OBC சான்றிதழ்.


போன்றவைகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ள கீழே தொடர்ந்து பார்க்கவும்.


Official Link


முதலில்  https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx என்ற இணையதளத்திற்கு சென்று E-Sevai  ID ஐ ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் 


 

அடுத்து அதிலுள்ள Sign-Up என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

அடுத்து அதில் தங்களுடைய முழு பெயர் , மாவட்டம் , தாலுக்கா , மொபைல் எண் , மின்னஞ்சல் முகவரி , ஆதார் எண் , Log in ID , Password Confirm Password மற்றும் Captcha Code ஆகியவற்றை டைப் செய்து கொள்ளுங்கள் பின்பு Sign-In என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய மொபைல் எண்ணுக்கு ஒரு OTP எண் அனுப்பப்படும் அந்த ஓடிபி எண்ணை டைப் செய்து Enter என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு ரெஜிஸ்டர் ஆகிவிடும்.

அடுத்து Log-In செய்வதற்கு மறுபடியும் ஹோம் பேஜ் க்கு செல்லுங்கள் அவற்றுள் யூசர் நேம் பாஸ்வேர்ட் டைப் செய்யுங்கள் அதன் பிறகு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள Captcha Code  டைப் செய்யுங்கள் பின்பு லாகின் என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள் இப்பொழுது உங்களுடைய ID Log-In ஆகிவிடும் அல்லது உங்கள் மொபைல் எண் பதிவு செய்து அதில் வரும் மோடி மூலம் லாகின் செய்யலாம்.



லாகின் செய்து உள்ளே சென்றவுடன் அதில் Services என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் பின்பு அதில் Revenue Deportment என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள் இவற்றை கிளிக் செய்தவுடன் Revenue Deportment ல் என்னென்ன சேவைகள் உள்ளது என்று லிஸ்ட் அவுட் காட்டப்படும.





அவற்றில் நீங்கள் என்ன விண்ணப்பிக்க போகிறீர்களோ அதனை செலக்ட் செய்து Procces என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். 

.




அடுத்து கேன் நம்பர் பதிவு செய்ய வேண்டும் அதில் உள்ள விபரம் தந்தை பெயர் , தாயார் பெயர் , குடும்ப உறுப்பினர் விவரம் என அனைத்தையும் பதிவு செய்யுங்கள் அவ்வளவுதான்.




அடுத்து நீங்கள் Select செய்த கோரிக்கைக்கு தேவையான Document upload செய்ய வேண்டும் அதாவது தங்களுடைய புகைப்படம் அட்ரஸ் ப்ரூப் பர்த் சர்டிபிகேட் self-declaration போன்றவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் அப்லோட் செய்த பிறகு Make Payment என்ற ஆப்ஷன் காட்டப்படும் அவற்றை கிளிக் செய்து கிரடிட் கார்ட் டெபிட் கார்டை பயன்படுத்தி விண்ணப்ப கட்டணம் 60 ரூபாயை செலுத்தவும்.

இவ்வாறு இணையதளத்தில் அப்ளை செய்தால் அப்ளை செய்த சில நாட்களுக்குள் நீங்கள் விண்ணப்பித்த சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.


எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள VIDEO வடிவிலான விளக்கத்தை பார்க்கவும்.


 லாகின் செய்ய ID கிரியேட் செய்வது எப்படி.?

Click Here


CAN நம்பர் பதிவு செய்வது எப்படி.?

Click Here


ஜாதி சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?

Click Here 


கணவனால் கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?

Click Here


முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?

Click Here


இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?

Click Here


வருமான சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?

Click Here


வேலையின்மை சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?.

Click Here